திருச்சி கூட்டத்தில் பங்கேற்ற துரைமுருகனுக்கு காய்ச்சல் - மருத்துவமனையில் பரிசோதனை

திருச்சி கூட்டத்தில் பங்கேற்ற துரைமுருகனுக்கு காய்ச்சல் - மருத்துவமனையில் பரிசோதனை

துரைமுருகன்

Duraimurugan | சென்னை செல்லும் போது துரைமுருகனுக்கு காய்ச்சல் இருந்ததால்  திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார்.

 • Share this:
  திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததால்  திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார்.

  திமுக சட்டப்பேரவை பொது கணக்கு குழு ஆய்வுக் கூட்டம் திருச்சியில் நேற்றும் திண்டுக்கல்லில் இன்றும் நடைபெற்றது.
  இந்த நிகழ்ச்சியில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு பின் சென்னை செல்லும் போது அவருக்கு காய்ச்சல் இருந்ததால்  திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார்.

  மருத்துவ பரிசோதனை முடிந்து துரைமுருகன் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டு சென்றார். அவருக்கு உடல்சோர்வு மற்றும் லேசான காய்ச்சல் இருந்ததால் பரிசோதனை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vijay R
  First published: