ஜல்லிக்கட்டு நாயகன் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக உறுப்பினர்கள் கூறியதற்கு, அவர் என்ன மாடுபிடி வீரரா என துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், ஓ.பி.எஸ். பெயரை குறிப்பிடும் போது ஜல்லிக்கட்டு நாயகர் என்றார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், துணை முதல்வரை ஜல்லிக்கட்டு நாயகன் என்கிறீர்களே அவர் என்ன மாடுபிடி வீரரா? இதற்கு முன் எப்போதாவது காளைகளை அடக்கி இருக்கிறீர்களா? இல்லை என்றால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு எங்களை அழைத்துச் செல்வீர்களா என கேட்டார். இதனைக் கேட்டு அவையில் சிரிப்பொலி எழுந்தது.
பின்னர் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஜல்லிக்கட்டுக்காக நாடே போராட்டம் நடத்திய போது சிறப்பு அனுமதி வழங்கி போட்டி நடத்தியதால் ஓ.பி.எஸ். ஜல்லிக்கட்டு நாயகன் என அன்போடு அழைக்கப்படுவதாக விளக்கம் அளித்தார்.
மேலும் அடுத்த ஆண்டு விராலிமலையில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு வருமாறு துரைமுருகனுக்கு அழைப்பு விடுத்த அவர், பார்வையாளராகவோ அல்லது மாடுபிடி வீரராகவோ வரலாம் என்றும் கூறினார். இந்த விவாதம் நடந்த போது ஓ.பன்னீர்செல்வம் அவையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.