Home /News /tamil-nadu /

‘’நான் எவ்வளவு ஆண்டுகள் இருப்பேன் என தெரியவில்லை’’ - துரைமுருகன் பேரவையில் உருக்கமான பேச்சு..

‘’நான் எவ்வளவு ஆண்டுகள் இருப்பேன் என தெரியவில்லை’’ - துரைமுருகன் பேரவையில் உருக்கமான பேச்சு..

அவை முன்னவர் துரை முருகன்

அவை முன்னவர் துரை முருகன்

கடல் போல திட்டங்களை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் முதலமைச்சரை பிடிக்காத ஆட்கள் யாருமே கிடையாது. டிவியில் பார்த்தால் சிறுவர்கள் குதூகலிக்கிறார்கள்.

    நான் எவ்வளவு ஆண்டுகள் இருப்பேன் என்று தெரியவில்லை என் வாழ்க்கையையும் சேர்த்து நீர் வாழ வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டு அவை முன்னவர் துரை முருகன் உருக்கமாக பேசினார்.

    இன்றைய சட்டப்பேரவையில் அவை முன்னவரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பேசியதாவது-
    அப்பாவையே தோற்கடித்த மகனாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிற்கிறார்.

    எங்களோடு கலந்து பேசி இருந்தால் கூட நாங்கள் எதாவது பேசி குழப்பி இருப்போம். தனி ஒருவராக அவர் சிந்தித்து முடிவெடுத்ததால் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். உங்களை வெல்வதற்கு எவராலும் முடியாது.

    இதையும் படிங்க - ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு.. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செய்த சாதனைகள் என்ன? 

    திட்டங்களை தீட்டுவதில் அவற்றை செயல்படுத்துவதில் முதலமைச்சருக்கு திருப்தி ஏற்படுவதில்லை. தண்ணீர் வர வர ஏரி, குளங்கள் நிரம்பி விடும். ஆனால் எவ்வளவு தண்ணீர் வந்தாலும் கடல் நிரம்பாது ஏற்றுக்கொள்ளும்.

    கடல் போல திட்டங்களை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் முதலமைச்சரை பிடிக்காத ஆட்கள் யாருமே கிடையாது. டிவியில் பார்த்தால் சிறுவர்கள் குதூகலிக்கிறார்கள்.
    ரோட்டில் பார்த்தால் பெரியவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.

    இதையும் படிங்க - திமுக அரசின் ஓராண்டுப் பயணமும்.. சர்ச்சைகளும்!

    சாலையில் செல்லும் போது யாராவது சாதாரண ஏழை மனு வைத்துக் கொண்டிருந்தாலும் அந்த தனி மனிதனிடமும் மனுவை பெறும் மகத்தான குணத்தை கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஓடாத தேரையே ஓட வைத்தவர் கலைஞர், செயல்படாத கவர்னரையே செயல்பட வைத்தவர் முதலமைச்சர்.

    ஆட்சி போகும் வரும், ஆனால் திராவிட இயக்க இருக்க வேண்டும். திராவிட இயக்க பற்றுடன் இருப்பவன் நான். திராவிட இயக்கத்தை காப்பற்றும் ஒரு ஆண் மகனாக நீங்கள்( முதல்வரை குறிப்பிட்டு) பிறந்திருப்பதில். எனக்கு மகிழ்ச்சி. நான் எவ்வள்வு ஆண்டுகள் இருப்பேன் என்று தெரியவில்லை என் வாழ்க்கையையும் சேர்த்து நீர் வாழ வேண்டும் என்று உருக்கமாக பேசினார்.
    Published by:Musthak
    First published:

    Tags: TN Assembly

    அடுத்த செய்தி