துரைமுருகன் சவாலை ஏற்று இராஜினாமா செய்யத் தயாரா? - அமைச்சர் ஜெயக்குமார் 

தமிழக சட்டமன்றத்தில் சட்டையை கிழித்து கொண்டு வெளியே வருவது போல் திமுக-வினர் பாரளுமன்றத்தில் இருந்து வெளியே வராமல் இருந்தால் சரி

துரைமுருகன் சவாலை ஏற்று இராஜினாமா செய்யத் தயாரா? - அமைச்சர் ஜெயக்குமார் 
அமைச்சர் ஜெயக்குமார்
  • News18
  • Last Updated: May 24, 2019, 3:25 PM IST
  • Share this:
சி.பா.ஆதித்தனாரின் 38-வது நினைவு நாளை ஒட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் மா.பா.பாண்டியரஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘‘தமிழர் தந்தை என அன்புடன் அழைக்கப்படும் சி.பா.ஆதித்தனாரின் நினைவு தினம் இன்று, தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டை யாரலும் மறக்க முடியாதது.

இந்தத் தேர்தலை பொறுத்தவரை தமிழக அரசு தொடர மக்கள் எங்களுக்கு கொடுத்த அங்கீகரமாக தான் பார்க்கிறோம். ஆர்.கே நகரில் மாயை ஏற்படுத்தி வளைத்தது போல தமிழகத்தையும் வளைத்துவிடலாம் என நினைத்தார் டிடிவி, அவரும் படுதோல்வி அடைந்துள்ளார்.


தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாத நபராக தான் டிடிவி உள்ளார். தமிழக சட்டமன்றத்தில் சட்டையை கிழித்து கொண்டு வெளியே வருவது போல் திமுக-வினர் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியே வராமல் இருந்தால் சரி.

திமுகவின் வெற்றி முதலை கையில் கிடைத்த தேங்காயை போல தான். ஸ்டாலினின் முதல்வர் கனவு ஒரு போதும் நிறைவேறாது என நாங்கள் கூறியது உறுதியாகியுள்ளது.

தேர்தலுக்குப் பிறகு ஆட்சி நீடிக்காது, அப்படி நீடித்தால் ராஜினாமா செய்கிறேன் என துரைமுருகன் சவால் விடுத்தார் இப்போது அவர் ராஜினாமா செய்யத் தயாரா?

Loading...

இது தற்காலிக வெற்றி இனி வரும் தேர்தல்களில் அதிமுக மகத்தான வெற்றி பெறும். இந்த முறை எதிர்கட்சியின் பிரசாரம் தவறுதலாக எடுபட்டுவிட்டது “ என்று அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.

நாடளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்யப்படுமா என்ற கேள்விக்கு ஆய்வு செய்யப்படும் என பதிலளித்தார்.

இதையும் பார்க்க :

கருணாநிதி கற்றுத்தந்த வழியில் உழைத்துப் பெற்ற வெற்றி


தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...