கொரோனா அச்சுறுத்தல்: சட்டசபையில் முதல்வர், துரைமுருகன் கலகல விவாதம்..!

கொரோனா அச்சுறுத்தல்: சட்டசபையில் முதல்வர், துரைமுருகன் கலகல விவாதம்..!
முதலமைச்சர் மற்றும் துரைமுருகன்
  • Share this:
கொரோனா வைரஸ் குறித்து சட்டசபையில் முதல்வர் மற்றும் எதிர்கட்சித் துணை தலைவர் துரைமுருகன் இருவருக்குமிடையே கலகலப்பான விவாதம் நடைபெற்றது.


சட்டசபையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து திமுக அளித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற போது பேசிய எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன், கொரோனா பயம் அதிகமாக இருக்கிறது. ” தொலைபேசியை எடுத்தால் இருமி கொரோனா என்கிறார், சட்டமன்றத்தின் வெளியே, பொது இடங்களில் கொரோனா நடவடிக்கை என எங்கு பார்த்தாலும் கொரோனா பயம் உள்ள நிலையில் ஒன்றும் இல்லை சொல்லிக் கொண்டே இருக்கிறீர்களே” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், ஏசியில் இருந்தால் கொரோனா பரவுமாம், உறுப்பினர்கள் அனைவரும் பயத்துடன் இருக்கிறோம். காப்பாத்துங்க சார். நாங்க எல்லாம் புள்ள குட்டி காரர்கள். உறுப்பினர்களுக்கு ஏதாவது ஆனால் இடைத்தேர்தலை எதிர்கொள்வது மிக சிரமம் என்று அவர் சொன்னவுடன் அவையில் சிரிப்பலை எழுந்தது.

அதற்கு பதிலளித்த முதலமைச்சர், கொரோனா பாதிப்பு குறித்து யாரும் அச்சப்பட வேண்டியது இல்லை. 70 வயதுக்கு மேல் உள்ளவர் என்பதால் எதிர்கட்சி துணை தலைவர் அச்சம் கொள்கிறார் போல என்று துரைமுருகன் குறித்த முதல்வரின் பதிலுக்கு அவையில் சிரிப்பலை எழுந்தது.


தொடர்ந்து பேசிய முதலமைச்சர், உங்களுக்கு வயது அதிகமாக இருந்தால் கூட நீங்கள் அச்சப்பட வேண்டாம். அதற்கு உரிய சிகிச்சை அளிக்கக் தயாராக உள்ளோம். வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்குத்தான் பாதிப்பு இருக்கிறது.  எனவே, வெளிநாட்டில் இருந்து வருபவர்களை பரிசோதனை செய்து வருகிறோம் என்றும் தெரிவித்தார்.


இந்த விவாதத்தின் போது பேசிய சபாநாயகர், சட்டசபையில் ஏசி அளவு குறைக்கப்பட்டுள்ளது. கிருமி நாசினி வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் போது மாஸ்க் வழங்கப்படும். சட்டசபைக்குள் கொரானா வைரஸ் தாக்கம் இல்லாமல்  இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனியும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


Also see...First published: March 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading