பேரறிவாளன் விடுதலைக்காக விதை போட்டது ம
திமுக. ஆனால் இன்று யார் யாரோ அறுவடை செய்து கொள்கிறார்கள் என்று கூறிய துரை வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில், தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ’காலம் கடந்து கிடைத்த தீர்ப்பாக இருந்தாலும், இந்த தீர்ப்பு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அவருக்கு கிடைத்த தீர்ப்பு போன்றே, மற்ற 6 பேருக்கும் கிடைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் பேரறிவாளன் உள்ளிட்ட அனைவருக்கும் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிய பங்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு உள்ளது என்ற அவர், உச்ச நீதிமன்றம் ஒரு சவுக்கடி போல் தீர்ப்பு அளித்துள்ளது என்றார்.
இந்நிலையில் இது தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி என்று கூறிய அவர், பேரறிவாளனுக்கு கிடைத்த தீர்ப்பு போன்று மீதமுள்ள 6 பேருக்கும் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது எனக் கூறினார்.
வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போர்க்குணமும் - பேரறிவாளன் விடுதலை குறித்து கமல்ஹாசன்
தொடர்ந்து பேசிய அவர், இந்த தீர்ப்புக்கு விதை போட்டது நாங்கள், ஆனால் வேறு யாரோ அறுவடை செய்கிறார்கள். அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்று தெரிவித்தார். அதேபோல், இந்த தீர்ப்பு குறித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏன் பதிலளிக்கவில்லை என்று தெரியவில்லை என்றும் அதிமுக ஆட்சி காலத்தில் பேரறிவாளன் விடுதலைக்கு சட்ட போராட்டங்கள் நடத்தியுள்ளனர் என்றும் பேசினார்.
அதுமட்டுமின்றி முள்ளிவாய்க்கால் நினைவு கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்த தீர்ப்பு குறித்து மாற்றுக்கருத்து கூறுவது கேலிக்கூத்தாக இருக்கிறது என்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.