ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

MK Stalin : நாளை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

MK Stalin : நாளை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

அண்ணா அறிவாலயம்

அண்ணா அறிவாலயம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை புதிதாக தேர்வான திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  இது குறித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 4.5.2021 செவ்வாய்க் கிழமை மாலை 6.00 மணியளவில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள “கலைஞர் அரங்கில்” நடைபெறும்.

  அதுபோது புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

  மே 7ஆம் தேதி புதன் கிழமை ஆளுநர் மாளிகையில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எளிமையாகன முறையில் இந்த பதவி ஏற்பு விழா நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அன்றே திமுக அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

  Must Read :  7ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்கிறார் மு.க.ஸ்டாலின்: ஆளுநர் மாளிகையில் எளிமையாக பதவி ஏற்பு

  இந்நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.

  Published by:Suresh V
  First published:

  Tags: Anna Arivalayam, DMK, Durai murugan, MK Stalin, TN Assembly Election 2021