கருணாநிதிக்கு அடுத்து நான்... 13ஆவது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறேன் - துரைமுருகன்

கருணாநிதிக்கு அடுத்து நான்... 13ஆவது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறேன் - துரைமுருகன்

துரைமுருகன்

கருணாநிதிக்கு அடுத்து நான் 13ஆவது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறேன் என்றும் இது கலாச்சாரப் படையெடுப்பை தடுக்கும் தேர்தல் எனவும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறினார்.

  • Share this:
    கருணாநிதிக்கு அடுத்து நான் 13ஆவது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறேன் என்றும் இது கலாச்சாரப் படையெடுப்பை தடுக்கும் தேர்தல் எனவும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறினார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டியில், பர்கூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மதியழகனை ஆதரித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பிரச்சாரம் மேற்க்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “கருணாநிதிக்கு அடுத்து நான் 13ஆவது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறேன்.

    என் அனுபவத்தில் பர்கூர் தொகுதியில் கூட்டத்தை பார்க்கும் போது மதியழகன் வெற்றி வாய்ப்பு உறுதியாகி உள்ளது. இந்தியாவில் பல பழக்க வழக்கம் கலாச்சாரம் உள்ளன. இதை தூக்கி எரிய மத்திய அரசு நினைக்கிறது இதன் மூலம் தமிழை அழிக்க நினைக்கிறார்கள்.

    யார் கண்ணுக்கும் தெரியாமல் கலச்சாரம், மொழி, பண்பாட்டை அழிக்க சூழ்ச்சி நடக்கிறது. அதை தடுத்து நிறுத்த ஸ்டாலின் முதலமைச்சர் ஆக வேண்டும். எதிர்க்க வேண்டிய நேரத்தில் எதிர்ப்பவர்கள்தான் அரசியல்வாதி அவர் தான் தலைவராக இருக்க முடியும்.

    தமிழையும், தமிழனையும் காப்பாற்ற மு.க.ஸ்டாலினை விட்டால் வேறு யாரும் இல்லை. அதனால்தான் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என நாட்டு மக்கள் கருதுகிறார்கள். அதிமுக அரசு 10 ஆண்டுகளில் ஒரு அணை கூட கட்டவில்லை. ஆனால், திமுக ஆட்சியில் 49 அணைகள் கட்டப் பட்டுள்ளன. ஒரு அணை அதிமுக கட்டி இருந்தால் அவர்களிடம் கைக்கட்டி நிற்க தயார்.

    கலாச்சாரப் படையெடுப்பை தடுக்கும் தேர்தல் இது. ஆகவே எந்த கட்சியில் இருந்தாலும் தமிழை காக்க திமுகவிற்கு ஆதரவு கொடுங்கள் என அனைத்து கட்சியினருக்கும், பொது செயலாளர் என்ற முறையில் அழைப்பு விடுகிறேன்.” என்று துரைமுருகன் பேசினார்.

    மேலும், திமுக ஆட்சிக்கு வந்தால் படேதலாவ் ஏரி கால்வாய் வெட்டி தரப்படும் என்றும் தொகுதி மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

    Must Read : தேர்தலுக்குப் பிறகு தளவாய் சுந்தரம் பாஜகவில் சேருவார் - மு.க.ஸ்டாலின்

     

    1957 முதல் 2016 வரை 13 சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, ஒரு முறை கூட தோல்வியை தழுவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: