அரசியலில் இருந்திருந்தால் அது தெரிந்திருக்கும்...! ரஜினிக்கு துரைமுருகன் பதில்

அரசியலில் இருந்திருந்தால் அது தெரிந்திருக்கும்...! ரஜினிக்கு துரைமுருகன் பதில்
எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்
  • News18
  • Last Updated: November 8, 2019, 1:03 PM IST
  • Share this:
தமிழகத்தில் சரியான தலைமைக்கு தற்போதும் வெற்றிடம் நிலவுவதாக ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில், அவருக்கு திமுக பொருளாளர் துரை முருகன் பதிலளித்துள்ளார்.

சென்னை போயஸ் கார்டனில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த், தன் மீது காவி சாயம் பூச முயற்சி நடப்பதாக கூறினார்.

தன்னை பாஜகவின் தலைவராக நிறுவ முயற்சி நடப்பதாகவும் அவர் கூறியிருந்தார். காவிச்சாயத்திற்கு வள்ளுவரும் மாட்ட மாட்டார். நானும் மாட்ட மாட்டேன் என்று கூறினார்.


பின்னர், மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், தமிழகத்தில் சரியான தலைமைக்கு தற்போதும் வெற்றிடம் இருப்பதாக தெரிவித்தார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் தமிழகத்தில் வெற்றிடம் எதுவும் இல்லை என்று கூறினார். திமுக பொருளாளர் துரை முருகன் பேசுகையில், “தமிழகத்தில் வெற்றிடத்தை திமுக தலைவர் ஸ்டாலின் நிரப்பி நீண்ட நாட்கள் ஆகிறது.

அரசியலில் இருந்திருந்தால் ரஜினிக்கு தெரிந்திருக்கும். அரசியலில் இல்லாததால் அது தெரியவில்லை. அவருக்கு யார் காவி பூசினார்கள்; யாருக்கு பதில் சொன்னார் என்று தெரியவில்லை என்றும் துரை முருகன் பேசினார்.

 
First published: November 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்