• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ‘துரோகிகளை பார்த்துக் கொண்டிருக்க முடியாது’ - வைகோவை குறிப்பிட்டு துரைமுருகன் பேச்சு

‘துரோகிகளை பார்த்துக் கொண்டிருக்க முடியாது’ - வைகோவை குறிப்பிட்டு துரைமுருகன் பேச்சு

Youtube Video

கட்சிக்கு துரோகம் செய்யும் வகையில் செயல்பட்டால், அவர்கள் கட்டம் கட்டி தூக்கி எறியப்படுவார்கள் என்றும் எச்சரித்தார்.

  • Share this:
    திருப்பத்தூர் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் ஜோலார்பேட்டையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், இனிமேலும் துரோகிகளை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என வைகோவை குறிப்பிட்டு பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் ஜோலார்பேட்டையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சக்கரபாணி ஆகியோர் பங்கேற்று வேட்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கினர். அப்போது பேசிய துரைமுருகன், உள்ளாட்சித் தேர்தலில் சீட்டு வழங்கவில்லை என்பதற்காக தங்களை அடித்து கூட கேட்கலாம் என்றும், ஆனால் கட்சிக்கு துரோகம் செய்யும் வகையில் செயல்பட்டால், அவர்கள் கட்டம் கட்டி தூக்கி எறியப்படுவார்கள் என்றும் எச்சரித்தார்.

    Must Read : தமிழ்நாட்டில் அக்டோபர் 31 வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

    அண்ணா காலத்தில் சம்பத், அதன்பின் எம்.ஜி.ஆர், பின்னர் கோபால்சாமி என எத்தனை காலத்துக்குத் தான் துரோகிகளை பார்த்துக் கொண்டிருப்பது என்றும், இனிமேல் அப்படி பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும் துரைமுருகன் பேசினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: