அண்ணாவின் பேச்சு திறன், கலைஞரின் ஆட்சி திறன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருப்பதாக சட்டப்பேரவையில் கூறிய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன், அடுத்த 25 ஆண்டு காலத்திற்கு திராவிட இயக்கத்திற்கும் ஆட்சிக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆட்சியையும் திராவிட இயக்கத்தையும் காப்பாற்றக் கூடியவர் மு.க.ஸ்டாலின் என கூறினார்.
பேரவையில் முதல்வர் உரைக்கு நன்றி தெரிவித்து நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், நீண்ட காலம் அரசியலிலிருந்து தியாகம் பல புரிந்து எதிர் நீச்சலிலே காலத்தை கழித்து ஒருவர் முதலமைச்சராக அமர்ந்த பிறகு முதல் முதலாக கவர்னர் உரைக்கு பதிலுரை அளிப்பது என்பது சாதாரணமானது அல்ல. முதல்வரின் உரையின் தொடக்கத்தில் நீதிக்கட்சியை தொட்டு, அதன் சாதனங்களை கூறி அண்ணா, கலைஞர் ஆகியோரின் வழியில் உரை நிகழ்த்தியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அண்ணாவின் பேச்சு திறன், கலைஞரின் ஆட்சி திரன் ஆகிய இரண்டையும் சேர்த்து முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். வரும் 25 ஆண்டு காலத்திற்கு திராவிட இயக்கத்திற்கும் ஆட்சிக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆட்சியையும் திராவிட இயக்கத்தையும் காப்பாற்றக் கூடியவர் மு.க.ஸ்டாலின் என்று கூறினார்.
இந்நிலையில், ஆளுநர் உரையில் பல முக்கிய அறிவிப்புகள் இடம் பெறவில்லை. காவிரி நதி நீர் இணைப்பு குறித்து ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை என எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார். அதற்கு நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துப் பேசினார்.
இந்நிலையில், கோதாவரி காவிரி நதிநீர் கண்டிப்பாக இணைக்கப்படும் கடந்த ஆட்சியில் நாங்கள் சொன்னதை நீங்கள் செய்யாமல் விட்டுவிட்டீர்கள். மாநிலத்திற்குள் இருக்கக்கூடிய ஆறுகளை அதிமுக அரசு இணைக்க தவறி விட்ட நிலையில், மாநிலங்களுக்கிடையேயான ஆறுகளை இணைக்க ஆலோசனை வழங்குவதா? என்று கேள்வி எழுப்பிய துரைமுருகன், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் உறுதியாக கோதாவரி காவிரி இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறினார்.
கிருஷ்ணா நீரை சென்னைக்கு கொண்டு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் எம்.ஜி.ஆர். என்று கூறிய சட்டமன்ற உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பதிலளித்துப் பேசிய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன், கிருஷ்ணா நதிநீர் திட்டத்தை ஆரம்பித்தவர் எம்.ஜி.ஆர்.- ஆக இருந்தாலும் 400 கிலோ மீட்டருக்கு கால்வாயை வெட்டி பூண்டி வரை நீரை கொண்டு வந்தவர் கலைஞர் கருணாநிதி. திட்டத்தை ஆரம்பித்தவர் எம்.ஜி.ஆர். என்றாலும், அதை முடித்துக் காட்டியவர் கலைஞர் என்று கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Durai murugan, MK Stalin, TN Assembly, Water