TN Assembly Election Results 2021 : நீண்ட இழுபறிக்குப் பின்னர் காட்பாடி தொகுதியில் துரைமுருகன் முன்னிலை

TN Assembly Election Results 2021 : நீண்ட இழுபறிக்குப் பின்னர் காட்பாடி தொகுதியில் துரைமுருகன் முன்னிலை

துரைமுருகன்

காட்பாடி தொகுதி திமுக வேட்பாளரும் அக்கட்சியின் பொதுச் செயலாளருமான துரைமுருகன் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்த நிலையில் தற்போது முன்னிலை பெற்றுள்ளார்.

  • Share this:
    தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, காட்பாடி தொகுதி திமுக வேட்பாளர் துரைமுருகன் பின்னடைவை சந்தித்து வந்த நிலையில், 16, 17 ஆவது சுற்றில் முன்னிலை பெற்றுள்ளது.

    அதன்படி, 16 ஆவது சுற்றில் துரைமுருகன் 57 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். அதனைத் தொடர்ந்து அவர் 63,500 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

    11 முறை சட்டப்பேரவைத் தேர்தலில் களம் கண்ட துரைமுருகன், 9 முறை காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு 7 முறை வென்றுள்ளார். அதன்படி, 10ஆவது முறையாக இந்தத் தொகுதியில் அவர் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Must Read :  ஆட்சி அமைக்க இருப்பது திமுகதான்... வரலாற்றில் புதியதோர் அத்தியாயம்!, எனினும் விழிப்புடன் இருக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

     

    இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தாராபுரம் தொகுதியில் பின்னடைவை சந்தித்தித்துள்ளார்.
    Published by:Suresh V
    First published: