Durai Murugan : ‘த்ரில் வெற்றி’... 10ஆவது முறையாக சட்டமன்றத்திற்குச் செல்கிறார் துரைமுருகன்

Durai Murugan : ‘த்ரில் வெற்றி’... 10ஆவது முறையாக சட்டமன்றத்திற்குச் செல்கிறார் துரைமுருகன்

துரைமுருகன்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காட்பாடி தொகுதியில், துரைமுருகன் வெற்றி பெற்றதை அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். அவர் 10ஆவது முறையாக சட்டமன்றத்திற்குச் செல்கிறார்.

  • Share this:
    வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் போட்டியிட்டார். இந்த தொகுதியில் முதன் முறையாக 1971ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்ட துரைமுருகன் வெற்றி பெற்றார்.

    பின்னர் ராணிப்பேட்டை தொகுதியில் 1977, 1980 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு 1984ஆம் ஆண்டு மீண்டும் காட்பாடியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

    அதனைத் தொடர்ந்து 1989ல் காட்பாடியில் மீண்டும் களம் இறங்கிய துரைமுருகன் வெற்றி பெற்றார். 1991ஆம் ஆண்டு காட்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் கலைச்செல்வியிடம் துரைமுருகன் தோல்வியடைந்தார்.

    அதன் பின்னர் நடைந்த அனைத்து தேர்தல்களிலும் துரைமுருவன் வெற்றி பெற்றுள்ளார். அதன்படி, 1996, 2001, 2006, 2011 மற்றும் 2016 என தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்றார்,

    இவ்வாறு 9 முறை காட்பாடியில் போட்டியிட்ட துரைமுருகன் 10ஆவது முறையாக இந்த முறை மீண்டும் காட்பாடியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

    அவர் 85,140 ஓட்டுகள் வாங்கியுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராமு 84,394 ஓட்டுகள் பெற்றார். 748 வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றியை த்ரில் வெற்றி பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பின்தங்கி இருந்த அவர் 17 ஆவது சுற்றுக்கு பின்னரே முன்னிலை பொற்றார்.

    இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் 10 ஆவது முறையாக வெற்றி பெற்ற துரைமுருகன் 1,000 ஓட்டுக்குகீழன வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும். இதனைத் தொடர்ந்து, துரைமுருகன் வெற்றியை அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். வெற்றியை தொடர்ந்து 10-வது முறையாக சட்டசபைக்கு துரைமுருகன் மீண்டும் செல்கிறார்.

    ராணிப்பேட்டை தொகுதியையும் சேர்த்து மொத்தம் 13 முறை துரைமுருகன் தேர்தல் களத்தை சந்தித்துள்ளார்.  10 ஆவது முறையாக வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குச் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கருணாநிதிக்கு அடுத்து நான் 13ஆவது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறேன்” என கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டியில், பர்கூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மதியழகனை ஆதரித்து பிரச்சாரத்தில் பேசிய துரைமுருகன் கூறியிருந்தார்.

    Must Read : 7ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்கிறார் மு.க.ஸ்டாலின்: ஆளுநர் மாளிகையில் எளிமையாக பதவி ஏற்பு

     

    1957 முதல் 2016 வரை 13 சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, ஒரு முறை கூட தோல்வியை தழுவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: