Home /News /tamil-nadu /

BREAKING | திமுகவின் பொதுச் செயலாளராகிறார் துரை முருகன் - பொருளாளர் பதவியில் இருந்து விலகல்

BREAKING | திமுகவின் பொதுச் செயலாளராகிறார் துரை முருகன் - பொருளாளர் பதவியில் இருந்து விலகல்

துரைமுருகன்

துரைமுருகன்

"துரைமுருகன், ஐ.பெரியசாமி, பொன்முடி என்று பலரின் பெயர்கள் அடிபட்டன"

  • News18
  • Last Updated :
    திமுகவின் பொதுச்செயலாளராக துரை முருகன் தேர்வு செய்யப்பட இருக்கிறார். இதற்காக, தற்போது வகிக்கும் பொருளாளர் பொறுப்பை அவர் ராஜினாமா செய்துள்ளார்.

    திமுகவில் நீண்ட காலமாக பொதுச்செயலாளராக இருந்த அன்பழகன் சமீபத்தில் மறைந்ததை அடுத்து, புதிய பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. துரைமுருகன், ஐ.பெரியசாமி, பொன்முடி என்று பலரின் பெயர்கள் அடிபட்டன.

    துரை முருகனுக்கே அதிக வாய்ப்பு என்று கூறப்பட்ட நிலையில், அதனை உறுதி செய்யும் விதமாக அவர் பொருளாளர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

    இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 29-ம் தேதி பொதுச்செயலாளர் தேர்வு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது, துரை முருகன் அந்தப்பதவிக்கு போட்டியிட கடிதம் மூலம் விருப்பம் தெரிவித்துள்ளார்.

    இதனை அடுத்து, பொருளாளர் பதவியில் இருந்தும் அவர் விலகியுள்ளார். இதனால், வரும் 29-ம் தேதி நடக்கும் பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்வு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube



    Published by:Sankar
    First published:

    Tags: DMK, Durai murugan

    அடுத்த செய்தி