4 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. இந்து சமய அறநிலையத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை மீதான மானியம் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை பகுதியில் மீன்வளக் கல்லூரி துவக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என போளூர் எம்.எல்.ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேரவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதிலளித்துப் பேசினார்.
அப்போது அமைச்சர் துரைமுருகன் பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் கேள்விக்கு அமைச்சர் பதில் அளிக்கும் போது நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்து, ஆம் இல்லை என பதில் அளிக்கிறார்கள். எம்.எல்.ஏக்கள் அடுத்து பேசும்போது சுருக்கமாக பேச வேண்டும்.
Must Read : பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறையா?... இன்று முடிவு - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்கள் கேள்விகளை எம்.எல்.ஏக்கள் பட்டு பட்டுனு அடிங்க என அறிவுரை வழங்கினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் இந்த அறிவுரை எல்லா எம்.எல்.ஏ.க்களுக்கும் பொருந்தும் என்று தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.