• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சாணி பவுடர் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சாணி பவுடர் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மா.சுப்ரமணியன்

மா.சுப்ரமணியன்

தற்கொலைகளை தடுக்கும் விதமாக சாணி பவுடர் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் நடைபெற்ற உலக தற்கொலை தடுப்பு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, தமிழ்நாட்டில் ஒரு வருடத்துக்கு 15 ஆயிரம் முதல் 16 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். சாலை விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கையை விட தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது.

    சாணி பவுடரை தண்ணீரில் கலந்து அதனை உட்கொண்டு தற்கொலை செய்து கொள்பவர்கள் பல மாவட்டங்களில் உள்ளனர். அதனை தடுக்கும் விதமாக சாணி பவுடர் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும்.

    மேலும் எலி மருந்து, பால்டாயில் போன்ற பொருட்களை விற்பவர்கள் தனியாக கடைகளுக்கு யார் வந்தாலும் அதை வழங்கக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. இந்த பொருட்களை வெளியில் தெரியும் படி வைக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

    திருமணங்கள், இறப்பு சடங்குகள் உள்ளிட்ட நிகழ்வுகளால் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கிறது. சென்னையில் கிளஸ்டர் ஏற்பட்ட இடங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இன்று சென்னையில் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    Also read: காவல் நிலைய பெயர் பலகைகளில் விளம்பரதாரரின் பெயரை உடனடியாக நீக்க வேண்டும்: டிஜிபி உத்தரவு

    அரசு மனநல காப்பக்கத்தில் குணமடைந்த நோயாளிகள் கொண்டு காப்பக வளாகத்தில் hot breads உடன் இணைந்து நடத்தும் அடுமனையை அமைச்சர் முன்னதாக தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து, அரசு மனநல காப்பக்க வளாகத்தில் உள்ள காலி இடங்களில் காய்கறிகள் விளைவித்து அதை அரசு மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: