”நான் அவ்ளோ பெரிய ரவுடி இல்லை...” டம்மி துப்பாக்கியால் மனைவிக்கு மிரட்டல் விடுத்து மாட்டிக்கொண்ட கணவர் மன்னிப்பு வீடியோ

வேலூரில் தனது மனைவியை துப்பாக்கியை காட்டி மிரட்டிய ரவுடி கணவர், போலீசாரின் விசாரணைக்கு பின்பு, தான் உண்மையிலேயே அவ்வளவு பெரிய ரவுடி இல்லை என மன்னிப்பு வீடியோ வெளியிட்டுள்ளார்.. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

Web Desk | news18-tamil
Updated: August 1, 2019, 3:55 PM IST
”நான் அவ்ளோ பெரிய ரவுடி இல்லை...” டம்மி துப்பாக்கியால் மனைவிக்கு மிரட்டல் விடுத்து மாட்டிக்கொண்ட கணவர் மன்னிப்பு வீடியோ
மனைவியை துப்பாக்கியை காட்டி மிரட்டிய ரவுடி கணவர்
Web Desk | news18-tamil
Updated: August 1, 2019, 3:55 PM IST
வேலூரில், தனது மனைவியை துப்பாக்கியை காட்டி மிரட்டிய ரவுடி கணவர், போலீசாரின் விசாரணைக்கு பின்பு, தான் உண்மையிலேயே அவ்வளவு பெரிய ரவுடி இல்லை என மன்னிப்பு வீடியோ வெளியிட்டுள்ளார்.

வேலூர் பிஷப் டேவிட் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கபாலி. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணியாற்றிய இவர், பலரிடம் பணம் மோசடி செய்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அவரது தொந்தரவு தாங்காமல் 4 வருடங்களுக்கு முன்பு அவரை பிரிந்து சென்ற 2 வது மனைவி வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார்.


இந்த நிலையில் தனது மனைவியை வெளிநாட்டில் இருந்து திரும்ப வரச்சொல்லி மிரட்டி துப்பாக்கியுடன் வீடியோ ஒன்றை வாட்ஸ் ஆப்பில் அனுப்பியுள்ளார்.

அந்த மிரட்டல் வீடியோவை முக நூலில் வெளியிட்ட அவரது 2-வது மனைவி, தனக்கும் வேலூரில் உள்ள தனது மகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி முகநூல் வாயிலாக கோரிக்கை வைத்தார். ஆன்லைன் மூலமும் போலீசில் புகாரும் அளித்திருந்தார்.

இதையடுத்து கபாலியை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த டம்மி துப்பாக்கி, செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

Loading...

இந்நிலையில், முன்னதாக அதிரடி ரவுடி போல் மிரட்டிய கபாலி, தான் ஒரு சாதாரண மனிதன், தெரியாமல் துப்பாக்கியை காட்டிவிட்டேன் எனவும் மன்னிப்பு கேட்டு விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரவுடிபோல் பேசி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அதிரடியை ஏற்படுத்திய நிலையில், புதிய வீடியோவும் வேகமாக பரவி வருகிறது. கை உடையாமல் வீடியோவை வெளியிட்டு தப்பி விட்டதாகவும் வலைதள வாசிகள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

வீடியோ: 

First published: August 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...