ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னையில் நடுநடுங்க வைக்கும் குளிர் - நிபுணர்கள் சொல்லும் காரணம்!

சென்னையில் நடுநடுங்க வைக்கும் குளிர் - நிபுணர்கள் சொல்லும் காரணம்!

சென்னையில் குளிர்

சென்னையில் குளிர்

சென்னையில் வாட்டி வதைக்கும் குளிர்..... காற்றழுத்த தாழ்வு மண்டலம் மழை கொடுக்காததால் குளிர் நிலவுவதாக நிபுணர்கள் கருத்து

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சென்னையில் கடும் குளிர் நிலவி வருவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

  சென்னையில் கடந்த சில நாட்களாகவே கடும் குளிர் நிலவி வருகிறது. வீடுகள் நெருக்கமாக இருக்கும் இடங்களிலும் வீடுகளுக்குள்ளும் பனி இறங்குகிறது. பொதுவாக மழை காலத்திலும் மார்கழி மாத்திலும்தான் குளிர் அதிகமாக இருக்கும் . ஆனால் கடந்த 4 தினங்களாக மழையில்லை என்றாலும் கடுங்குளிர் நிலவி வருகிறது. பகல் நேரங்களிலும் குளிர் இருப்பதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

  வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத் தாழ்வு மண்டலம் பெரிய அளவில் மழையை கொண்டு வரவில்லை என்றாலும் சென்னையை குளிர் பிரதேசமாக மாற்றியுள்ளது. கடந்த இரு தினங்களில் சென்னையில் 24 டிகிரி செல்சியஸ் முதல் 25 புள்ளி 6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. இதுவே குளிர் பகுதியான பெங்களுருவில் 27 புள்ளி 2 டிகிரி செல்சியசாக வெப்பம் பதிவானது.

  வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத் தாழ்வு மண்டலம் எதிரெதிர் திசையில் சுழன்று இந்தியாவின் வட பகுதிகளுக்கு குளிர்ந்த காற்றை கடத்துவதால் சென்னையில் கடும் குளிர் நிலவுவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

  சுருக்கமாக சொன்னால் சென்னை நகரமே உதகையை போல் மாறியுள்ளது. இதனை நெட்டிசன்கள் மீம்ஸ்களை போட்டு கொண்டாடி வருகின்றனர்.

  இதையும் படிங்க... எனக்கு என்னமோ நம்ம ஊட்டில இருக்க மாதிரியே ஒரு பீலிங்கு.. வைரலாகும் குளிர் மீம்ஸ்..!

  உதகையில் உறைபனி காலம்

  கொடைக்கானல், உதகையில் உறைபனி காலம் தொடங்கியுள்ளதால் குளிர் கடுமையாக உள்ளது.  கொடைக்கானலில், வழக்கமாக டிசம்பர் மாதத்தில் பனிப்பொழிவு தொடங்கும் நிலையில் தற்போது முன்கூட்டியே பனி பொழிந்து வருகிறது. இரவு நேரத்தில் 10 டிகிரியாக இருக்கும் வெப்பநிலை, அதிகாலையில் 8 டிகிரி வரை குறைந்தது. இதனால், புற்கள் மீது விழுந்த பனித்துளிகள் உறைபனியாக மாறின. ஜிம்கானா, கீழ்பூமி பாம்பார்புர‌ம், பிரையண்ட் பார்க் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிப்பொழிவு இருந்தது. ஏரியின் நீர்ப்பரப்பின் மீது படர்ந்துள்ள பனிமூட்டம், மேகம் போல நகர்ந்து செல்லும் ரம்மியமான காட்சி காண்போரை கவர்ந்தது.

  இதேபோல, கோவை புறநகரில் உள்ள கருமத்தம்பட்டி, கணியூர், தென்னம்பாளையம், நீலாம்பூர், சூலூர் பகுதிகளில் பனி மூட்டம் காணப்பட்டது. திருப்பூரிலும் கடும் பனிமூட்டம் நிலவியது .

  நீலகிரி மாவட்டத்தில் உதகை, தலைக்குந்தா, குதிரை பந்தைய மைதானம், காந்தள் போன்ற பகுதிகளில் உறைப்பனி பொழிவு காணப்பட்டது. இரவு முதல் பனிப்பொழிவு பெய்து வரும் நிலையில் காலையில் கடும் குளிர் நிலவுகிறது உதகையில் குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரியாக பதிவாகியுள்ளது. வரும் நாட்களில் -0 டிகிரியை எட்ட வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

  Published by:Lakshmanan G
  First published:

  Tags: Chennai, Cold, Ooty, Weather News in Tamil