ஓ.என்.ஜி.சி எண்ணெய் துரப்பண பணியால் நிலத்தடி நீர் கருப்பாகி துர்நாற்றம்!

கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வாரம் ஒருமுறை விநியோகிக்கப்படும் குடிநீரை மட்டுமே நம்பியுள்ளதாக பழையபாளையம் மக்கள் கூறுகின்றனர்.

news18
Updated: October 9, 2019, 10:57 PM IST

சீர்காழி அருகே ஓ.என்.ஜி.சி எண்ணெய் துரப்பண பணியால் நிலத்தடி நீர் கருப்பாகி துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பழையபாளையம் கிராமத்தில் 4 ஆண்டுகளுக்கு முன் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் துரப்பன பணியை தொடங்கியுள்ளது.

அதனை அடுத்து மெல்ல மெல்ல நிலத்தடி நீரின் தன்மை மாறி வந்ததாக கூறும் மக்கள், தற்போது கை பம்புகளில் வரும் தண்ணீர் முழுமையாக கருப்பு நிறத்தில் மாறிவிட்டதாக கவலை தெரிவிக்கின்றனர்.

சுற்றியுள்ள பல கிராமங்களில் நிலத்தடி நீரின் தன்மை முற்றிலும் மாறிவிட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வாரம் ஒருமுறை விநியோகிக்கப்படும் குடிநீரை மட்டுமே நம்பியுள்ளதாக பழையபாளையம் மக்கள் கூறுகின்றனர்.

தண்ணீர் தேவையென்றால்  5 கிலோ மீட்டர் வரை செல்ல வேண்டியிருப்பதாகவும், இதனால் பலர் ஊரை விட்டு சென்றுவிட்டதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Loading...

Also see...

First published: October 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...