• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நீர்ப்பாசனத் துறையில் உள்ள ஈடுபாட்டால், அத்துறையை முதல்வரிடம் கேட்டு பெற்றேன்: அமைச்சர் துரைமுருகன்

நீர்ப்பாசனத் துறையில் உள்ள ஈடுபாட்டால், அத்துறையை முதல்வரிடம் கேட்டு பெற்றேன்: அமைச்சர் துரைமுருகன்

நீர்ப்பாசனத் துறையில் உள்ள ஈடுபாட்டால், அத்துறையை முதல்வரிடம் கேட்டு பெற்றேன்: அமைச்சர் துரைமுருகன்

நீர்ப்பாசனத் துறையில் உள்ள ஈடுபாட்டால், அத்துறையை முதல்வரிடம் கேட்டு பெற்றேன்: அமைச்சர் துரைமுருகன்

நீர்ப்பாசனத் துறையில் உள்ள ஈடுபாட்டால் அத்துறையை தாம் முதல்வரிடம் கேட்டு பெற்றதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

  • Share this:
தமிழ்நாடு சட்டப்பேரவையில் துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்குவதற்கு முன்பு சட்டபேரவையில் 50 ஆண்டு காலம் உறுப்பினராக செயல்பட்டு வரும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தீர்மானம் கொண்டு வந்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் பாராட்டு தெரிவிக்கும் தீர்மானத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை பாராட்டி புகழாரம் சூட்டினர்.

பின்பு துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின் முதல் நாளான இன்று நீர்வளத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர்.

Also read: சட்டப்பேரவையில் 50 ஆண்டுகள்... பொன்விழா நாயகன் துரைமுருகன் - பேரவையில் ஒருமனதாக தீர்மானம்

பின்னர் நீர்வளத்துறை மீதான மானியக் கோரிக்கைகள் மீது பதிலுரை வழங்கிப் பேசிய அமைச்சர் துரைமுருகன், புதிதாக உருவாக்கப்பட்ட இத்துறை, பொதுப்பணித் துறையில் இருந்து பிரிக்கபட்டதாகவும், வளர்ந்து வரும் நீர் ஆதாரத்தை பெருக்க முதல்வர் ஆலோசனைப்படி இத்துறை உருவாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

புதிய துறைக்கு பழைய பெயர் என்றாலும் 1989-90ம் ஆண்டில் பொதுப்பணித்துறைக்கு  தாம் அமைச்சராக நியமிக்கப்பட்டதாகவும், அறிஞர் அண்ணா அமைச்சரவையில் பொதுப்பணித்துறை மறைந்த திமுக தலைவர் கருணாநிதியிடம் கொடுக்கப்பட்டதாகவும், பிறகு சென்டிமென்ட்டாக அத்துறையை தமக்கு கருணாநிதி வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.

இத்துறை தலைமைச் செயலகத்தில் அமர்ந்து உத்தரவிட கூடிய துறை இல்லை என்றும், ஆறு கண்மாய்களை நேரடியாக பார்வையிட்டால் தான் பிரச்சனைகளுக்கு தீர்க்க முடியும் என கருணாநிதி கூறியதாக தெரிவித்தார்.

அதன்படியே, இத்துறையில் தாம் அனுபவம் பெற்றதாக கூறிய அமைச்சர் துரைமுருகன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேசிக் கொண்டு இருக்கும்போது உங்களுக்கு என்ன இலாக்கா வேண்டும் என்று என்னிடம் கேட்டார். நீர்ப்பாசனத் துறை மீதான ஈடுபட்டாலும், அனுபவத்தாலும் அத்துறையை கேட்டு பெற்றதாக குறிப்பிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நான் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது நந்தியாறு அணை, கொடிவேரி அணை உள்ளிட்ட 20 அணைகளை கட்டியதாக கூறினார். திமுக ஆட்சியில்,  விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியது தனக்கு மகிழ்ச்சி அளித்தாகவும், காவேரி இடைக்கால தீர்ப்பு, தீர்ப்பாயம், காவிரி இறுதித் தீர்ப்பு ஆகிவற்றை பெற்றுத்தந்ததாகவும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தியதாகவும் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் குறிப்பிட்டார்.

தஞ்சையில் விவசாயிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு தூர்வாரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், தூர்வாரும் பணிகளை சிறிதும் தொய்வில்லாமல் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடைபெற்றது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குறிப்பிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: