Tasmac sales | லாக்டவுன் எதிரொலி: நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை!

மாதிரிப் படம்

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் ரூ.100.43 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

  • Share this:
    நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் மதுக்கடைகளில் ரூ.426 கோடிக்கு விற்பனை நடைபெற்ற நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

    கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழகத்தில் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை இரண்டு வார ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் போது அனைத்து வகையான மதுக்கடைகளும் மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதைத்தொடர்ந்து, நேற்று காலை கடை தொடக்கப்பட்ட நேரம் முதலே அதிகப்படியான மக்கள் கடைகளில் மது வாங்க வரிசைகளில் நின்றனர். இந்த கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக நேற்று மாலை 6 மணி வரை இயங்கும் என்றும் ஞாயிற்றுக் கிழமையான இன்றும் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் என்றும் அரசு அறிவித்திருந்தது.

    அதனைத் தொடர்ந்து மரக்கட்டைகள் அமைத்து மக்களை சமூக இடைவெளியுடன் நிறுத்துவதற்கான வழிவகைகளும் செய்யப்பட்டன. 14 நாட்கள் ஊரடங்கு என்பதால், மதுபாட்டில்களை அதிகளவில் வாங்கி கையிருப்பு வைத்துகொள்ளும் வகையில், மதுப்பரியர்கள் அதிகளவில் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

    இதனால் நேற்று ஒரே நாளில் ரூ.426.24 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் ரூ.100.43 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. மதுரை மண்டலத்தில் ரூ.87.28 கோடியும், திருச்சி மண்டலத்தில் ரூ.82.59 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.79.82 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ.76.12 கோடியும் மது விற்பனை நடந்துள்ளது. இது வழக்கமான விற்பனையை விட 3 மடங்கு அதிமாகும்.

    இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து மது வகைகளை பைகளிலும், பெட்டிகளிலும் மதுபிரியர்கள் வாங்கி செல்கின்றனர். இதனால், இன்றும் 500 கோடிக்கு மேல் விற்பனை ஆகலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
    Published by:Esakki Raja
    First published: