கன மழை எதிரொலி: பில்லூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு!

பில்லூர் அணை

மேட்டுப்பாளையம் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை முதல் லேசாக மழை தூறிக்கொண்டிருந்தது. எங்கும் இதமான காற்று வீசி ரம்மியமான சூழ்நிலை காணப்பட்டது.

  • Share this:
    அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுவிக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை முதல் லேசாக மழை தூறிக்கொண்டிருந்தது. எங்கும் இதமான காற்று வீசி ரம்மியமான சூழ்நிலை காணப்பட்டது. விவசாய விளை நிலங்களுக்கு குளிர்ச்சியை தந்தது.

    பில்லூர் அணை:

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் வானில் மேகமூட்டம் காணப்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணை அமைந்துள்ளது.  நீலகிரி மாவட்டம் ,பில்லூர் அணை நீர் தேக்க பகுதிகள், மற்றும் கேரளாவில் பெய்யும் மழை நீரை ஆதாரமாக கொண்டு பில்லூர் அணை கட்டப்பட்டது. அணையின் மொத்த நீர்மட்டம் உயரம் 100 அடி ஆகும். அணையின் நீர்மட்டம் உயரம் 15 ஆம் தேதி காலை 82.50 அடியாக இருந்தது. அணைக்கு முற்றிலும் நீர்வரத்து காணப்படவில்லை. இந்த நிலையில் கேரளாவில் பெய்த கனமழை காரணமாக பில்லூர் அணைக்கு திடீரென நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.  அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது இதனால் அணையின் நீர்மட்டம் உயரம் படிப்படியாக உயர்ந்து 87.50 அடியை எட்டியது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம்  5 அடியாக உயர்ந்தது. அணையின் நீர் மட்டத்தை ஒரே சீராக வைத்திருக்க அணையில் மின்சார உற்பத்திக்காக 2 எந்திரங்கள் இயக்கப்பட்டது இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறியது. இதன்காரணமாக மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு பெருக்கெடுத்து ஓடியது.

    தீயணைப்பு நிலையத்திற்கு கூடுதலாக அவசரகால மீட்பு ஊர்தி:

    இந்த நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அன்னூர் மெயின் ரோட்டில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை செயல்பட்டு வருகிறது. தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் அவசர காலங்களில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்ததையடுத்து  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  பேரிடர்கால மீட்புப்பணிக்காக கோவை  தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தலைமை அலுவலகத்திலிருந்து அவசர கால  மீட்பு ஊர்தி மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது..

    மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு கூடுதலாக அவசரகால மீட்பு ஊர்தி!


    இந்த ஊர்தியில் தண்ணீருக்கு பதிலாக  ஹைட்ராலிக் கட்டர், ஹைட்ராலிக் ஸ்வெட்டர்,  எலக்ட்ரிக் ஜென் செட், எலக்ட்ரிக் பவர் ஷா, ஹைட்ராலிக் ஜாக்கி, பேட்டரி மூலம் 6 டன் எடை கொண்டபொருட்களைமீட்கபோயிங்என்ஜின் ,கான்கிரீட் கட்டர், ட்ரில்லிங் மிஷின் ,காங்கிரீட் ட்ரில்லிங் மிஷின்
    ஹைட்ராலிக் டோர் ஓபன் மெஷின்,லைப்_பாய் ,லைப் ஜாக்கெட், டெலிஸ்கோபிக்லேடர் மற்றும் வைடும் லொகேஷன் கேமரா , தெர்மல் இமேஜ் கேமரா உள்பட பேரிடர் மீட்பு அவசர பணிக்காக அனைத்து பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன..

    மழைக்காலங்களில் ஆற்றில் சிக்கி தவிப்பவர்களை ரப்பர் படகு மற்றும் கயிறு மூலம் மீட்பது, இடிந்து விழுந்த கட்டிடங்களை கான்கிரீட் ட்ரில்லிங் மெஷின் மூலம் வெட்டி அகற்றுவது,  கட்டிட இடிபாடுகளுக்கிடையில் சிக்கி தவிப்பவர்களை மீட்பது , மலைப்பாதையில் மண்சரிவால் சாலையின் குறுக்கே சாய்ந்து விழுந்த மரங்களை பவர் ஷா மூலம் வெட்டி அகற்றுவது என பல்வேறு மீட்புப் பணிக்காக இந்த அவசர கால மீட்பு ஊர்தி பயன்படுத்தப்படும்.. தீயணைப்பு மீட்பு பணிகள் துறை மேற்கு மண்டல இணை இயக்குனர் (பொறுப்பு) சத்யநாராயணன் தலைமையில் கோவை மாவட்ட உதவி அலுவலர் பி. அழகர்சாமிமேற்பார்வையில் தீயணைப்பு படை வீரர்கள் 24 மணி நேரமும் பேரிடர் கால மீட்புப்பணிக்காக தயார் நிலையில் உள்ளனர்..

    மேட்டுப்பாளையம் செய்தியாளர் எஸ். யோகேஷ்வரன்
    Published by:Arun
    First published: