நொய்யல் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் மீண்டும் மூழ்கிய தரைப்பாலம்!

பாலம் மூழ்கிய நிலையில் ஆண்டிப்பாளையம் - கல்லூரி சாலை இடையே போக்குவரத்து தடைபட்டுள்ளது. வாகன ஓட்டிகள் 14 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நொய்யல் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் மீண்டும் மூழ்கிய தரைப்பாலம்!
தரைப்பாலம் மூழ்கியது
  • News18
  • Last Updated: October 19, 2019, 4:17 PM IST
  • Share this:
திருப்பூரில் பலத்த மழை காரணமாக நொய்யலில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் தரைப்பாலம் மீண்டும் மூழ்கியது.

நொய்யல் ஆற்றில் நேற்றிரவு முதல் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. அதனால் அணைப்பாளையம் தரைப்பாலம் மூழ்கியது. காலையில் நீர் வரத்து குறைந்ததால் தரைப்பாலத்தில் போக்குவரத்து தொடங்கிய நிலையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அதனால் பாலம் மூழ்கிய நிலையில் ஆண்டிப்பாளையம் - கல்லூரி சாலை இடையே போக்குவரத்து தடைபட்டுள்ளது. வாகன ஓட்டிகள் 14 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


கனமழை காரணமாக, தேனி, கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், இரவு நேரங்களில் கொட்டித் தீர்க்கும் பலத்த மழையால், கும்பக்கரை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவியில் குளிக்க ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தடை 26-வது நாளாக  நீடிக்கிறது.

Also see...

First published: October 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...