• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு!

மேட்டூர் அணை

மேட்டூர் அணை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் வால்பாறை பகுதிகளில் பெய்யும் கனமழையால், பில்லூர், ஆழியார். பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

  • Share this:
    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

    கர்நாடகா, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், கே.ஆர்.எஸ்., கபினி அணைகள் வேகமாக நிரம்பின. இரு அணைகளில் இருந்தும், தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு 36 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 34 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தொடர் மழையால் கே.ஆர்.எஸ்., அணையின் நீர்மட்டம் 47 அடியை எட்டியுள்ளது.

    காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ள உபரி நீரால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 19 ஆயிரத்து 665 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 73 புள்ளி 27 அடியாக உயர்ந்துள்ள நிலையில், டெல்டா பாசனத்துக்காக 12 ஆயிரம் கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் வால்பாறை பகுதிகளில் பெய்யும் கனமழையால், பில்லூர், ஆழியார். பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    Also read: தேசிய பொறுப்பு; பல்வேறு மொழிகளைக் கற்று பேசி அசத்தும் வானதி சீனிவாசன்!

    கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் பெய்த கனமழையால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து, 135 புள்ளி 25 அடியை எட்டியுள்ளது. அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு 900 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த மழையால், திற்பரப்பு அருவியில் தண்ணீர் மிதமாக விழுகிறது. அருவிக்கு சுற்றுலாப்பயணிகளை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால், அடவிநயினார் கோயில் அணை முழு கொள்ளளவான 132 அடியை எட்டியது. இதனால், அணைக்கு வரும் 45 கன அடி நீர், அப்படியே வெளியேற்றப்படுகிறது.

    Also read: மண்ணோடும் மழையோடும் போராடும் விவசாயிகளை நா கூசாமல் திருடர்கள் என்பதா? பி.டி.ஆருக்கு அண்ணாமலை கண்டனம்!

    தொடர் மழையால் தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில், பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆர்ப்பரித்து விழும் அருவியின் அழகை மட்டும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: