• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மீண்டும் கனமழை: இந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

மீண்டும் கனமழை: இந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கன்னியாகுமரி மழை

கன்னியாகுமரி மழை

தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து இன்று(நவம்பர் 18) தெற்கு ஆந்திரா - வட தமிழக கடற்கரை நோக்கி நகர்கிறது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழகத்திற்கு இன்று ரெட் அலெர்ட் வானிலை ஆய்வு மையம் சார்பில் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, சேலம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட  மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மழையின் தீவிரத்தை பொறுத்து மற்ற மாவட்டங்களிலும் விடுமுறை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட நிலையில்,  விழுப்புரம், அரியலூர்,  மயிலாடுதுறை,  நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கும் பள்ளி மற்றும் கல்லூர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, இன்று 25 மாவட்ட பள்ளிகளுக்கும், 18 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    Must Read : தமிழகத்தில் ஆங்காங்கே விடிய விடிய கொட்டிய மழை

    இதேபோல புதுச்சேரியிலும் கன மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூர்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: