Home /News /tamil-nadu /

திருவாரூரில் கனமழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

திருவாரூரில் கனமழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

மழை

மழை

திருப்புதல் தேர்வு நடைபெறுவதால் 12ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

    மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்களான, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் கடலோர மாவட்டங்களான, டெல்டா மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    மேலும், சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

    மேலும் படிக்க: ஹிஜாப் விவகாரத்தில் பாஜக நாட்டை நாசமாக்க நினைக்கிறது.. திருமாவளவன் வேதனை!!

    இந்நிலையில், திருவாரூரில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழையாக பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

    மேலும், திருப்புதல் தேர்வு நடைபெறுவதால் 12ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Heavy rain, Rain

    அடுத்த செய்தி