கொரோனா அச்சம்: சத்துணவு பொருட்களை குழந்தைகள் வீட்டில் ஒப்படைக்க உத்தரவு..!

கொரோனா அச்சம்: சத்துணவு பொருட்களை குழந்தைகள் வீட்டில் ஒப்படைக்க உத்தரவு..!
குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு
  • Share this:
கொரோனா விடுமுறை காரணமாக 16 நாட்களுக்கு உரிய சத்துணவு பொருள்களை குழந்தைகளின் வீடுகளில் ஒப்படைக்க அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து அதற்கான பணி இன்று தொடங்கியது.

கொரோனா அச்சம் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இரண்டு முதல் மூன்று வயது மதிக்கத்தக்க குழந்தைகள் படிக்க கூடிய அங்கன்வாடி மையங்களிலும் இதே நடைமுறை செயல்படுத்தப்பட்ட நிலையில் அங்கு வரக் கூடிய குழந்தைகளுக்கு தினமும் வழங்கப்படும் சத்துணவு பொருட்கள் ஏற்கனவே அங்கன்வாடி மையங்களுக்கு வரப்பட்டுள்ளது.

எனவே அவற்றை சம்பந்தப்பட்ட குழந்தைகளின் வீடுகளுக்கே சென்று வழங்குமாறு அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்பட்ட அரிசி, பருப்பு, எண்ணெய், முட்டை, இணை உணவு விட்ட அனைத்து பொருள்களையும் குழந்தைகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று சத்துணவு பணியாளர்கள் வழங்கினார்.


மார்ச் 31 வரையிலான சத்துணவு பொருள்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் 1 முதல் மீண்டும் பள்ளிக்கு வருமாறு மாணவர்களிடம் அறிவுறுத்தவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட பொருட்களின் விபரம் குறித்து பதிவேடுகளில் பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Also see...
First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading