கொரோனா பரவலால் வேலையிழப்பு... போலியோ பாதிப்புடைய மகளுக்காக கலங்கும் கோவை சமையல் கலைஞர்..

கொரொனா தொற்று காரணமாக வேலை இல்லாததால் போலியோவால் பாதிக்கப்பட்ட  மகளை பாதுகாக்க முடியாமல் கோவையை சேர்ந்த சமையல் கலைஞர் தவித்து  வருகிறார்.

கொரோனா பரவலால் வேலையிழப்பு... போலியோ பாதிப்புடைய மகளுக்காக கலங்கும் கோவை சமையல் கலைஞர்..
சமையல் கலைஞர் யூசூப் மற்றும் அவரது மகள்
  • Share this:
கொரொனா தொற்று காரணமாக வேலை இல்லாததால் போலியோவால் பாதிக்கப்பட்ட  மகளை பாதுகாக்க முடியாமல் கோவையை சேர்ந்த சமையல் கலைஞர் தவித்து  வருகிறார்.

கோவை  கரும்புக்கடை பகுதியை சேர்ந்த சமையல் கலைஞர் யூசூப். சமையல் ஒப்பந்ததாரர்களிடம் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 3 மாதங்களாக கொரொனா  பரவல் காரணமாக போதிய பணி வாய்ப்பு இல்லாமல் தவித்து  வருகிறார்.

இவரது இளைய மகள் அஷ்னா  போலியோவால்  பாதிக்கப்பட்டவர். இரண்டு கால்களும்,ஒரு கையும் சரி வர பேசவும் முடியாத அஷ்னாவிற்கு சமீபத்தில் சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஒரு வருடத்திற்கு தினமும் பிசியோதெரபி அவசியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில், யூசுப்பிற்கு போதிய வருவாய்  இல்லாததால் பிசியோதெரபி சிகிச்சை செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது.


Also read... தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு..

பிசியோதெரபி சிகிச்சை அளிக்க தினமும் 350 ரூபாய் வரை தேவைப்படுகிறது. ஆனால் வேலையில்லாமலும், வீட்டு வாடகை கொடுக்க முடியாமலும், மகளின் சிகிச்சை செய்ய முடியாமலும் சமையல் கலைஞர் யூசூப் தவித்து வருகிறார். சிறுமி அஷ்னாவின்  சிகிச்சைக்கு தமிழக அரசும், தன்னார்வலர்களும்  உதவ வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
First published: July 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading