தடுப்பூசி தட்டுப்பாடு: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நாளை தடுப்பூசி முகாம் கிடையாது!

கோப்புக் காட்சி

தடுப்பூசிகளுக்கான தட்டுப்பாடு மீண்டும் ஏற்பட்டுள்ளது.  கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நாளை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படாது. தடுப்பூசி வந்ததும், விரைவில் செலுத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி  அறிவித்துள்ளது. 

  • Share this:
    தட்டுப்பாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நாளை  தடுப்பூசி முகாம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் தடுப்பூசி இயக்கத்தை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன. பொதுமக்கள் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள ஆர்வமாக உள்ள நிலையில்,  போதிய தடுப்பூசி கையிருப்பில் இல்லை என்று கூறப்படுகிறது.  இதனால் தடுப்பூசி செலுத்துவதில் தடை ஏற்பட்டுள்ளது.

    கடந்த வியாழனன்று 10 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகம் வந்தடைந்தன.  அவை தமிழகம் முழுவதும் பிரித்து அனுப்பப்பட்டன. இதை தொடர்ந்து தமிழகத்தில் மீண்டும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இந்நிலையில், தடுப்பூசிகளுக்கான தட்டுப்பாடு மீண்டும் ஏற்பட்டுள்ளது.  கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நாளை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படாது. தடுப்பூசி வந்ததும், விரைவில் செலுத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி  அறிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக,திருச்சி மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான மணப்பாறை, வையம்பட்டி, துறையூர், முசிறி, லால்குடி, மண்ணச்சநல்லூர், திருவெறும்பூர் உள்ளிட்ட ஊரக பகுதிகளில் நாளை கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறாது என மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்கச் சாவடிகளை நீக்குமா தமிழக அரசு?


    தடுப்பூசி இருப்பு இல்லாத காரணத்தால் சேலத்திலும் நாளை தடுப்பூசி முகாம் நடைபெறாது என  மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் 25க்கும் மேற்பட்ட மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது.  தற்போது,  தடுப்பூசி இருப்பு இல்லாததால் தடுப்பூசி முகாம் நடைபெறாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதேபோல் ஈரோட்டிலும் தடுப்பூசி முகாம் நடைபெறாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
    Published by:Murugesh M
    First published: