குடித்துவிட்டு தகராறு செய்த கணவன்! 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு இளம் பெண் தற்கொலை!

குடித்துவிட்டு தகராறு செய்த கணவன்! 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு இளம் பெண் தற்கொலை!
தற்கொலை செய்துகொண்ட மினி
  • News18
  • Last Updated: November 25, 2019, 4:35 PM IST
  • Share this:
கன்னியாகுமரி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில், இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த இளம்பெண் தானும் தற்கொலை செய்துக்கொண்டார்.

நாகர்கோவில் அருகே உள்ள அறுகுவிளைப் பகுதியைச் சேர்ந்தவர் பிரவின் ராஜூ. இவர் குடித்துவிட்டு அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மதுகுடிப்பதை நிறுத்தாவிட்டால் தானும், குழந்தைகளும் இறந்துவிடுவோம் என பலமுறை மினி கூறியும், பிரவின்ராஜூ மதுப்பழக்கத்தை தொடர்ந்ததாக கூறப்படுகிறது.


இந்நிலையில் கடந்த 19-ம் தேதி கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையில் இரண்டு பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் குடித்துள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி மினி உயிரிழந்தார். இரண்டு குழந்தைகளும் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also see...
First published: November 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading