கோவையிலிருந்து துபாய், பாங்காக்குக்கு விமான சேவை தொடங்க வேண்டும்! மக்களவையில் ஆ.ராசா கோரிக்கை

கோவையை சர்வதேச நகரங்களுடன் இணைத்தால் தொழில் வளம் மேலும் பெருகும்

கோவையை சர்வதேச நகரங்களுடன் இணைத்தால் தொழில் வளம் மேலும் பெருகும்

 • News18
 • Last Updated :
 • Share this:
  கோவை நகரில் இருந்து துபாய் உள்ளிட்ட சர்வதேச நகரங்களுக்கு விமான சேவை தொடங்கப்பட வேண்டும் என மக்களவையில் திமுக உறுப்பினர் ஆ.ராசா கோரிக்கை விடுத்தார்.

  கோவை நகரம் தொழில் வளம் மிகுந்த நகரம் என்பதால் அந்நகரை சர்வதேச நகரங்களுடன் இணைத்தால் தொழில் வளம் மேலும் பெருகும் என்றும், அன்னிய நேரடி முதலீடுகள் மிக அதிக அளவில் கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்றும் கூறினார்.

  இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சாதகமான அறிக்கை வந்த பிறகும் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
  Published by:Sivaranjani E
  First published: