• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவ பணியாளர்களுக்கு பிரியாணி செய்து கொடுத்த டி.எஸ்.பி!

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவ பணியாளர்களுக்கு பிரியாணி செய்து கொடுத்த டி.எஸ்.பி!

செவிலியருக்கு உணவு வழங்கும் டி.எஸ்.பி

செவிலியருக்கு உணவு வழங்கும் டி.எஸ்.பி

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மானாமதுரை சப் டிவிசன் காவலர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு சிக்கன் பிரியாணி செய்து கொடுத்துள்ளார் சிவகங்கை டி.எஸ்.பி கார்த்திகேயன்.

  • Share this:
மானாமதுரையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், காவலர்களுக்கும் தனது சொந்த செலவில் பிரியாணி செய்து கொடுத்துள்ளார் டி.எஸ்.பி கார்த்திகேயன்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சப் டிவிசன் பணியாற்றும் 300 போலிசார் மற்றும் மருத்துவ பணியாளரக்கு சிக்கன் பிரியாணி செய்து கொடுத்த மானாமதுரை டி.எஸ்.பி கார்த்திக்கேயன் கொரோனா வைரஸ் தாக்கம் 144 தடை உத்தரவு போன்ற பணிகளில் கடுமையாக பணியாற்றும் போலிசார்க்கு ஒரு நாள் அவர்களுக்கு சிக்கன் பிரியாணி செய்து கொடுக்க ஏற்பாடு செய்தார்.

மானாமதுரை சப்.டிவிசன் திருப்புவனம், திருப்பசேத்தி, பழையனூர், மானாமதுரை, சிப்காட், ஆகிய காவல் நிலையங்களில் பணியாற்றும் போலிசார், இன்ஸ்பெக்டர், சார்பு ஆய்வாளர்கள், ஆகிய 300 போலிசருக்கு சிக்கன் பிரியாணி, முட்டையுடன் வழங்கப்பட்டன. இதே உணவு மருத்துவ பணியாளர்களுக்கும் பிரியாணி வழங்கப்பட்டன.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: