முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கூலித் தொழிலாளர்களுக்கு தனது ஒரு மாதச் சம்பளத்தில் நிவாரணப் பொருட்களை வழங்கிய திருவாரூர் டி.எஸ்.பி..!

கூலித் தொழிலாளர்களுக்கு தனது ஒரு மாதச் சம்பளத்தில் நிவாரணப் பொருட்களை வழங்கிய திருவாரூர் டி.எஸ்.பி..!

நிவாரணப் பொருட்கள் வழங்கிய திருவாரூர் டி.எஸ்.பி.

நிவாரணப் பொருட்கள் வழங்கிய திருவாரூர் டி.எஸ்.பி.

தனது ஒரு மாத ஊதியமான 80 ஆயிரத்தில் அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவை அடங்கிய தொகுப்பை வழங்கியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கூலித் தொழிலாளர்களுக்கு தனது ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிவாரண பொருட்களாக வாங்கி வழங்கியுள்ளார் திருவாரூர்  டி.எஸ்.பி ராஜமோகன்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொழிலாளர்கள் கடந்த இரண்டு மாத காலமாக வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஏழை கூலித் தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து தவித்து வரும் நிலையில், இவர்களுக்கு பல்வேறு கட்சியினரும் தொண்டு நிறுவனங்களும் இலவசமாக நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் திருநெய்ப்போர் ஊராட்சிக்கு உட்பட்ட  கடுவங்குடி கிராமத்தைச் சேர்ந்த 120 ஏழைக் குடும்பங்கள்  கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இரண்டு மாத காலமாக வேலை இழந்து தவித்து வந்த நிலையில், இவர்களுக்கு திருவாரூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு டிஎஸ்பி ராஜமோகன் தனது ஒரு மாத ஊதியமான 80 ஆயிரத்தில் அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவை அடங்கிய தொகுப்பை வழங்கியுள்ளார்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Also see:

First published:

Tags: Lockdown, Police, Thiruvarur