மதுபோதையில் போலீசாரை எட்டி உதைத்த சினிமா பெண் உதவி இயக்குனர் கைது - பரபரப்பு காட்சிகள்

மதுபோதையில் போலீசாரை எட்டி உதைத்த சினிமா பெண் உதவி இயக்குனர் கைது - பரபரப்பு காட்சிகள்

போலீசை திட்டிய இளம் பெண் கைது

மது போதையில்  போக்குவரத்து காவல் ஆய்வாளரை ஆபாசமாக பேசி தாக்க முற்பட்ட  இளம் பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  • Share this:
கொரோனா ஊரடங்கு தளர்விற்கு பிறகு சென்னையில் மதுபானக் கடைகள், சொகுசு மதுபான விடுதிகள் திறக்கப்பட்டுள்ளதால் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆர் பகுதிகளில் மது குடித்துவிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருவதாக வந்த தகவலின் பேரில் அப்பகுதிகளில் போக்குவரத்து போலீசார் மற்றும் ரோந்து பணிகள் மற்றும் வாகன தணிக்கை குழு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சனிக்கிழமையான நேற்று போலீசார் திருவான்மியூர், பெசன்ட் நகர் ஈ.சி.ஆர் பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது திருவான்மியூர் பேருந்து நிலையம் பின்புறமுள்ள சவுத் அவென்யூ சாலையில் ஒரு கார் மது போதையில் ஓட்டிவருவது தெரிய வந்து அதனை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.வாகனத்தில் ஒரு இளைஞரும் ஒரு இளம்பெண்ணும் அளவுக்கு அதிகமான மது போதையில் வாகனத்தை ஓட்டி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை செய்தபோது இளம் பெண் போலீசாரை மிகவும் ஆபாசமாக திட்டியும் பணி செய்ய விடாமல் தடுத்து பிரச்னையில் ஈடுபட்டார்.

குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வந்ததற்காக இளைஞர் மீதும் இளம் பெண் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர். மேலும் விசாரணையில் வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் அடையாறு பகுதியைச் சேர்ந்த 27 வயதான டோட்லா சேஷூ பிரசாத் என்பதும் உடன் வந்த இளம்பெண் அடையாறு பகுதியை சேர்ந்த காமினி என்பதும் தெரியவந்தது. மேலும் இளைஞர் மற்றும் அந்த இளம்பெண்ணின் உறவினர்களுக்கு கால் செய்து அவர்களை அழைத்துச் செல்லும்படி போலீசார் கூறியுள்ளனர்.

போக்குவரத்து போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து அவர்களை மிகவும் அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமாக பேசிய இளம்பெண் காமினி மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்து போலீசார் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் போக்குவரத்து போலீசார் பணி நேரத்தில் தங்களது உடலில் பொருத்தப்பட்டிருந்த பாடி ஒன்(Body one) கேமரா மற்றும் மொபைல் போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் தற்போது வெளியாகியுள்ளன.

வீடியோவில் அந்தப் பெண் அளவுக்கு அதிகமான மது போதையில் தான் மீடியாவில் பணிபுரியும் பண் என்று, போலீசாரை ஒருமையில் பேசியும், மேலும் அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமாக பேசியும் போலீசாரை தாக்க முற்படுவது பதிவாகியுள்ளது. இந்தக் காட்சி பதிவுகளை வைத்து இளம்பெண்  காமினி மீது ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த திருவான்மியூர் போலீசார் காமினியிடம் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து போக்குவரத்துக்கு ஆய்வாளர் மாரியப்பனை ஆபாச வார்த்தையால் திட்டி, அவரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் மதுபோதையில் கார் ஓட்டிய டோட்லா சச்சின் பிரசாத், காமினி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். காமினி திரைப்படத்துறையில் உதவி இயக்குநராக பணியாற்றி வருவதாகவும், டோட்லா சச்சின் பிரசாத் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: