முகப்பு /செய்தி /தமிழ்நாடு / போக்குவரத்து பணியாளர்களுக்கு எச்சரிக்கை... மதுஅருந்திவிட்டு பணிக்கு வந்தால் கடும் நடவடிக்கை

போக்குவரத்து பணியாளர்களுக்கு எச்சரிக்கை... மதுஅருந்திவிட்டு பணிக்கு வந்தால் கடும் நடவடிக்கை

மாதிரி படம்

மாதிரி படம்

புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்திய நிலையில் பணிக்கு வரும் போக்குவரத்து பணியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - போக்குவரத்துத்துறை எச்சரிக்கை.

 • Last Updated :
 • Viluppuram, India

மது அருந்திய நிலையில் பணிக்கு வரும் போக்குவரத்து தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பணிமனையில் பணியாற்றும் போக்குவரத்து பணியாளர்கள் பாதுகாப்பான முறையில் பணிபுரிவதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,

 • பணிமனைக்கு உள்ளே வரும் பேருந்துகள் 5 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்பட வேண்டும்.
 • பேருந்திற்குள் வெல்டிங் பணி செய்திடும் போது கட்டாயம் பேட்டரி ஓயர் துண்டிக்கப்பட வேண்டும்.
 • தொழில்நுட்ப பணிகளுக்காக பேருந்துகள் பணிமனைக்குள் இயக்கிடும்போது, ஓட்டுனர் உரிமம் இல்லாத எந்த ஒரு பணியாளரும் பேருந்தை இயக்கக் கூடாது.
 • இயந்திரங்களை கையாளும் பணியாளர்கள் பாதுகாப்பு உடை அணிந்து பணிபுரிய வலியுறுத்தல்.
 • பணியின் போது கைபேசிகளை முற்றிலும் தவிர்த்திட வேண்டும்.
 • பணியாளர் பணி நேரத்தில் பணிமனையை விட்டு வெளியே செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால், உரிய மேற்பார்வையாளரிடம் அனுமதி பெற்றே செல்ல வேண்டும்.
 • பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதை கிளை மேலாளரும், பணியிலிருக்கும் மேற்பார்வையாளரும், பாதுகாவலர்களும் கண்டிப்பாக உறுதிப்படுத்த வேண்டும்
 • புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்திய நிலையில் பணிக்கு வரும் போக்குவரத்து பணியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு எச்சரிக்கை விடுத்து போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
top videos

  First published:

  Tags: Public Transport, Tamil Nadu, Transport ministry, Transport workers