இராஜபாளையம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட சண்டை 2 பிரிவினரின் மோதலாக மாறியது... எப்படி?

Youtube Video

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே, 2 நபர்களிடையே மது அருந்திய போது ஏற்பட்ட தகராறு, 2 பிரிவினரின் மோதலாக மாறியது. இறுதியில் நடந்தது என்ன?

 • Share this:
  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ரெட்டியபட்டி கிராமத்தில், கோடாங்கிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 41 வயதான மணிகண்டன், 23 வயதான கருத்தப்பாண்டி இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். மதுபோதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட, இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். அதோடு நிற்காமல், அங்கிருந்து புறப்பட்டு கோடாங்கிப்பட்டி கிராமத்திற்குள் சென்று தங்கள் நண்பர்களையும் அழைத்து வந்துள்ளனர்.

  இருதரப்பிலும் திரண்ட நபர்கள் ஒருவருக்கு ஒருவர் போதையில் அடித்து சண்டை போட்டுள்ளனர். அதோடு நிற்காமல் அங்குள்ள வீடுகளின் மின்விளக்குகள், கதவுகள், ஜன்னல்களையும், இரண்டு இருசக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கியுள்னர்.

  தகவல் அறிந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் ஏற்படுத்தினர்.

  பின்னர் மோதலில் ஈடுபட்ட மணிகண்டன், கருத்தப்பாண்டி, 22 வயதான கிரி, 48 வயதான பாலமுருகன் ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மோதலில் காயமடைந்த மணிகண்டன், கருத்தப்பாண்டி இருவரும் சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  கோடாங்கிப்பட்டி கிராமத்தில் மேலும் மோதல் பரவாமல் இருக்க, பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மோதலில் ஈடுபட்ட மேலும் சில நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர். மதுபோதையில் 2 பேர் சண்டையிட்டு அதை ஊர்ச் சண்டையாக மாற்றியதும், போலீசார் குவிக்கப்பட்டதும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  மேலும் படிக்க... அரை நிர்வாணமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்..  குடிகாரர்கள் பேச்சு விடிந்தால் போச்சு என்பதுபோல் குடிகாரர்களின் சண்டையும் விடிந்தால் போச்சு என்று கிண்டல் செய்த போலீசார் அங்கிருந்து கலைந்து சென்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: