ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் இனி ஏலம் தான்: புதிய ரூல்ஸை கொண்டு வர போக்குவரத்து காவல்துறை திட்டம்

குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் இனி ஏலம் தான்: புதிய ரூல்ஸை கொண்டு வர போக்குவரத்து காவல்துறை திட்டம்

மாதிரி படம்

மாதிரி படம்

பல வாகன ஓட்டிகள் அபராத தொகையை செலுத்தாமல் வாகனத்தை இயக்கி வருவதால் போக்குவரத்து காவல்துறை புதிய முடிவு

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  குடிபோதையில் வாகனம் ஓட்டி போலீசாரிடம் சிக்கும் வாகன ஓட்டிகள்  14 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்தவில்லையென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  குடிபோதையில் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் 10ஆயிரம் அபராதம் விதித்து வருகின்றனர். ஆனால் பல வாகன ஓட்டிகள் அபராத தொகையை செலுத்தாமல் வாகனத்தை இயக்கி வருகின்றனர்.

  இதனால் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, போக்குவரத்து போலீசார் அபராத தொகையை செலுத்துமாறு நீதிமன்றம் மூலமாக வாரண்ட் பெற்று குறிப்பிட்ட வாகன ஓட்டிகளுக்கு அனுப்புகின்றனர். நீதிமன்ற வாரண்ட் வழங்கி 14 நாட்களுக்குள் வாகன ஓட்டிகள் அபராத தொகை செலுத்தவில்லையென்றால் வண்டி பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  இதையும் படிங்க: இல்லத்தரசிகளுக்கு குட் நீயூஸ்..! 3 மாசம் ஆனாலும் கெட்டுப்போகாத ஆவின் பால் அறிமுகம் - இனி அதிகாலையில் எழுந்திருக்க வேண்டாம்

   இது போல கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை குடிபோதையில் வாகனம் ஓட்டி அபராத தொகை செலுத்தாத 50 வாகன ஓட்டிகளின் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்திற்கு விட இருப்பதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Drunk an drive, Traffic Police, Traffic Rules