சிவகங்கையில் மது போதையில் கூடுதலாக மது வாங்க பணம் எடுக்கச் சென்றபோது விபத்து: இளைஞர் ஒருவர் பலி- இருவர் படுகாயம்

விபத்துக்குள்ளான இரு சக்கர வாகனம்

சிவகங்கையில் மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானார். இருவர் படுகாயமடைந்தனர்.

  • Share this:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை விளாரிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர். காத்தலிங்கம். அவருக்கு வயது 23. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் சிற்ப வேலை செய்து வருகிறார். இவர் தற்போது பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதால் நேற்றைக்கு முந்தைய தினம் பெங்களூரில் இருந்து தனது சொந்த ஊர் திரும்பினார்.

இந்தநிலையில் நேற்றுறு அவரது நண்பர்கள் அருண் மற்றும் கவிராஜ் ஆகியோரை அழைத்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் பணம்பட்டி அரசு மதுபான கடையில் மது அருந்தியுள்ளார்.

விபத்தில் சிக்கியவர்


கையில் பணம் தீர்ந்ததால் அருகில் உள்ள புதுவயல் வந்து ஏடிஎம்மில் பணம் எடுக்க மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது கருநாவல்குடிவளைவில் திரும்பும் பொழுது அங்கிருந்த பாலத்தில் மோதி காத்தலிங்கம் சம்பவ இடத்திலேயே பலியானார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவரது நண்பர்கள் அருண் மற்றும் கவிராஜ் ஆகியோர் காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுகுறித்து சாக்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தியாளர்: முத்துராமலிங்கம்
Published by:Karthick S
First published: