தென்ஆப்பிரிக்காவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ.70 கோடி மதிப்புள்ள 9.87 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு பெருமளவில் போதைப்பொருள் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னை வரும் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில் இன்று தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க்கில் இருந்து தோகா வழியாக சென்னை வந்த விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் வந்த இரண்டு ஆப்பிரிக்க நாட்டு பெண் பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் தனி அறைக்கு அழைத்துச் சென்று அவர்களின் உடமைகளை சோதனைனர். அதில், ஸ்ட்ராலர் பேக்கில் சுமார் 70 கோடி மதிப்புள்ள போதை பொருள் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போதைப் பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து இரண்டு பெண் பயணிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.