Home /News /tamil-nadu /

ஆன்லைன் மூலம் கட்டுப்பாடுகள் இல்லாமல் மருந்துகள் விற்கபடுவதை தடுக்க வேண்டும் - மருந்து உற்பத்தியாளர்கள், கடை உரிமையாளர்கள் கோரிக்கை

ஆன்லைன் மூலம் கட்டுப்பாடுகள் இல்லாமல் மருந்துகள் விற்கபடுவதை தடுக்க வேண்டும் - மருந்து உற்பத்தியாளர்கள், கடை உரிமையாளர்கள் கோரிக்கை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

தமிழ்நாட்டில் சமீபத்தில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் ஆன்லைன் மூலம் மருந்துகள் வாங்கி போதைக்கு பயன்படுத்தியதாக இளைஞர்கள் பிடிபட்டனர்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ஆன்லைன் மூலம் கட்டுப்பாடுகள் இல்லாமல் மருந்துகள் விற்கப்படுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மருந்து உற்பத்தியாளர்கள், மருந்து கடை உரிமையாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் சமீபத்தில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் ஆன்லைன் மூலம் மருந்துகள் வாங்கி போதைக்கு பயன்படுத்தியதாக இளைஞர்கள் பிடிபட்டனர். கோவையில் இதே போன்ற ஆன்லைன் மூலம் மருந்து வாங்கி தொடர்ந்து பயன்படுத்தி வந்ததால் மாணவர் ஒருவர் உயிரிழந்துவிட்டார்.

இந்நிலையில் schedule H ( அட்டவணை எச்) மற்றும் schedule H1 பட்டியலில் உள்ள மனநோய்க்கான மருந்துகள், தூக்க மாத்திரைகள், ஆன்லைன் மூலம் கட்டுப்பாடுகள் இல்லாமல் கிடைப்பதனால் இது போன்ற பழக்கங்கள் ஊக்குவிக்கப்படுவதாக கூறுகின்றனர்.

தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க பொருளாளர் ரமேஷ் கூறுகையில், " மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் 1945, விதி 65-2ன் கீழ்  Schedule ( அட்டவணை) H மருந்துகள் மருத்துவரின் பரிந்துரை படி மருந்தாளுனரின் நேரடி மேற்பார்வையில் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஆனால் ஆன்லனில் எப்படி நேரடியாக மருந்தாளுனர் மேற்பார்வை செய்ய முடியும்? வாடிக்கையாளர் சமர்ப்பிக்கும் மருத்துவர் பரிந்துரை சீட்டு உண்மையா போலியா என கண்டறிய வாய்ப்பில்லை. ஒருவரே அதிக அளவிலான மருந்துகளை ஒரே நேரத்தில் வாங்கிக் கொள்வதில் கட்டுப்பாடு இல்லை. போதைக்காக மருந்துகள் வாங்கப்பட்டது தெரிய வந்தாலும் அதன் பின் வேறு மாநிலத்திலிருந்து ஆன்லைனில் விற்றவரை கண்டறியவது மிகவும் சவால் என்று கூறுகிறார்.

மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எடுத்துக் கொள்ளக்கூடிய பாராசிடாமல், வலிக்கான தைலம் உள்ளிட்ட மருந்துகள்  மட்டும் ஆன்லைன் மூலம் வழங்கலாம் என தமிழ்நாடு மருந்துகடை உரிமையாளர்கள் சங்க சென்னை செயலாளர் நடராஜ் தெரிவிக்கிறார்.

மருந்துகள் விற்கும் இணையதளங்களே மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாத நபர்களுக்கு தங்கள் இணையதளம் மூலம் மருத்துவர் ஆலோசனை வழங்குவது சரியா என்றும் கேள்வி எழுப்புகிறார். ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்கக் கூடாது என சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்கிறார்.

ஆன்லைன் மூலம்  மருந்துவர் நோயாளிக்கு ஆலோசனை வழங்கும் முன் ஒருமுறையாவது அவரை நேரில் பார்த்திருந்தால் தான் சரியான மருந்துகள் பரிந்துரைக்க முடியும் என  டெலி மெடிசின் வசதிகளை பயன்படுத்தும் தொற்றுநோய் மருத்துவர் சுரேஷ் கூறுகிறார். ஆன்லைன் வசதிகளை பயன்படுத்தாமல் இருக்க முடியாது அதே நேரம் சில கட்டுப்பாடுகள் தேவை என்கிறார் அவர்.

Also read... இபிஎஸ் நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளது - அறப்போர் இயக்கம்

தமிழ்நாட்டில் போதை பழக்கத்தை தடுக்க வேணடும் என முதல்வர் உத்தரவிட்டிருக்கும் நிலையில் மருந்து கட்டுப்பாட்டு துறை சார்பாக கடந்த வாரம் தமிழகத்தில் உள்ள 33,000 கடைகளை ஆய்வு செய்தனர்.

இது குறித்து சுகாதாரத்துறை செயலர் செந்தில் குமார் கூறுகையில், தவறு செய்ய நினைப்பவர்கள் ஆன்லைன் மட்டுமல்லாமல் நேரடியாக வாங்கும் போது தவறு செய்யலாம், எனவே ஆன்லைன் மூலம் போதைக்கு மருந்துகள் விற்கப்படுகிறது என தகவல் கிடைத்தால் மருந்து எங்கிருந்து வந்ததோ சம்பந்தப்பட்ட மாநிலத்துக்கு நேரடியாக கடிதம் எழுத முடிவு செய்துள்ளோம். காவல்துறை சைபர் க்ரைம் பிரிவிடம் தகவல்கள் அளிக்கும் படி கேட்டுள்ளோம்" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Medical shop, Online medicine

அடுத்த செய்தி