குன்னூரில் தலைதூக்கும் வறட்சி.. உணவு தேடி நீர்நிலைக்குள் இறங்கிய காட்டு எருமை!

குன்னூரில் தலைதூக்கும் வறட்சி.. உணவு தேடி நீர்நிலைக்குள் இறங்கிய காட்டு எருமை!

காட்டு மாடு

வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உணவு தேடி காட்டு மாடு ஒன்று நீர்நிலைக்குள் இறங்கியது.

  • Share this:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை கடும் உறைபனி கொட்டியது. இதனால் புற்கள் மற்றும் மரம் செடி கொடிகள் காய்ந்து காணப்படுகிறது. மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கடும் வறட்சி நிலவும். அதன் காரணமாக அவ்வப்போது காட்டு தீ ஏற்பட்டு காய்ந்த புற்கள் மற்றும் தாவரங்கள் தீயில் கருகி பின்னர் புதிதாக வளர்கின்றன. இதனால் தாவரங்களை உண்ணும் வன விலங்குகளான யானை, மான், காட்டுஎருமை உள்ளிட்ட விலங்குகள் பசுமையான தாவரங்களை தேடியும் தண்ணீர் தேடியும்  இடம் பெயர்கின்றன.

உதகை


மலைக்காய்கறி தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் அருகே படையெடுக்கின்றன. இந்நிலையில் குன்னூர் அருகே காட்டேரி அணை பகுதியில் காட்டு எருமை ஒன்று பசுமையான இலைகளை தேடி அணையில் இறங்கி அவற்றை உண்டு நீரை பருகி வருகின்றது. கோடை மழை ஒன்றே மீண்டும் பசுமைக்கு திரும்ப வழி என்று வன விலங்கு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

கூடலூர் பகுதியில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது இதன் காரணமாக பொதுமக்கள் வெளியில் நடமாடவே சிரமப்படுகின்றனர். இத்துடன் மாயாறு, பாண்டியாறு உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்து விட்டது. தடுப்பணைகளிலும் நீர் வரத்து குறைந்துள்ளது.

வறட்சி தடுப்பணைகளில் இருந்து கூடலூருக்கு வரும் குடிநீர் குழாய்களை காட்டுயானைகள் உடைத்து தாகம் தணித்து வருகின்றன. மேலும் தடுப்பணையில் போதிய நீர் இல்லாததால் கூடலூர் பகுதி பொதுமக்களுக்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
Published by:Arun
First published: