ஓட்டுநர் உரிமத்தில் நிரந்தர முகவரி: பதிலளிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

மாதிரிப் படம்

பிற மாநிலங்களில் ஓட்டுநர் பயிற்சிப்பள்ளிகள் மூலம் அளிக்கப்படும் விண்ணப்பங்களை ஏற்று ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்படுகிறது - மனுதாரர்

  • News18
  • Last Updated :
  • Share this:
ஓட்டுனர் உரிமம் கோரி நிரந்தர முகவரியைக் குறிப்பிட்டு அளிக்கும் விண்ணப்பங்களை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற தமிழக போக்குவரத்துத் துறை உத்தரவை எதிர்த்த மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்க மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓட்டுனர் உரிம ஸ்மார்ட் கார்டுகளில் நிரந்தர முகவரி மட்டுமே அச்சிடப்படுவதால், நிரந்தர முகவரியை மட்டுமே குறிப்பிட வேண்டும். அவ்வாறு குறிப்பிட்டு உரிமம் கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்பங்களை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று  தமிழக போக்குவரத்துத் துறை உத்தரவிட்டது. அதைமீறி அலுவலக முகவரி, பள்ளி முகவரி மற்றும் ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி முகவரிகளை குறிப்பிட்டு அளிக்கும் விண்ணப்பங்களை ஏற்கக்கூடாது என்றும் அறிவுறுத்தி, தமிழக போக்குவரத்து ஆணையர் கடந்த பிப்ரவரி 7-ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மோட்டார் வாகனச் சட்டத்திற்கு விரோதமாக உள்ள இந்த உத்தரவை ரத்துசெய்து, ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகள் மூலம் அளிக்கப்படும் விண்ணப்பங்களையும் ஏற்க உத்தரவிடக் கோரி, தென்னிந்திய ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, நீதிபதி கிருஷ்ணகுமார் முன் விசாரணைக்கு வந்தபோது, பிற மாநிலங்களில் ஓட்டுநர் பயிற்சிப்பள்ளிகள் மூலம் அளிக்கப்படும் விண்ணப்பங்களை ஏற்று ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதி, இந்த மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதில்அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
Published by:Sivaranjani E
First published: