காலாவதியான லைசென்சை புதுப்பிக்கும் கால அவகாசம் குறைப்பு - தமிழக அரசு

கோப்பு படம்

 • News18
 • Last Updated :
 • Share this:
  காலாவதியான ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்கான காலத்தை குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  தமிழகத்தில் இதுவரை ஒருவரது ஓட்டுநர் உரிமம் காலாவதியாகிவிட்டால் அதைப் புதுப்பிப்பதற்கு ஐந்து ஆண்டுகள் கால அவகாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது காலாவதியான ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  அதன்படி ஐந்து ஆண்டுகளாக இருந்த கால அவகாசம் ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது.

  புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி ஓராண்டிற்குள் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்காவிட்டால் மீண்டும் புதிதாக உரிமத்திற்கு விண்ணப்பித்து அனுமதிபெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  வீடியோ பார்க்க: அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச போட்டிக்கு திருச்சி மாணவி தேர்வு

  Published by:Sheik Hanifah
  First published: