• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஒட்டுநர் உரிமம் பெறுவதில் மோசடிகள் அரங்கேறுவது எப்படி? - ஆர்.டி.ஐ-யில் அம்பலம்

ஒட்டுநர் உரிமம் பெறுவதில் மோசடிகள் அரங்கேறுவது எப்படி? - ஆர்.டி.ஐ-யில் அம்பலம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

வாகன ஒட்டுநர் உரிமம் வழங்குவதில் மோசடிகள் அரங்கேறுவது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அம்பலம்

  • Share this:
    தமிழகத்தில் உள்ள சில போக்குவரத்து அலுவலகங்களில் சரக்கு வாகன ஒட்டுநர் உரிமம் வழங்குவதில் மோசடிகள் அரங்கேறுவது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் மூலம் அம்பலமாகியுள்ளது .

    மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் 70 வயதான ராஜேந்திரன். 1988 ஆம் ஆண்டு இருசக்கர வாகன ஒட்டுநர் உரிமம் சென்னை வட்டாரா போக்குவரத்து அலுவலகத்தில் பெருகின்றார் .அதன் பிறகு 11 ஆண்டுகளுக்கு பிறகு 1999 ஆம் ஆண்டு மதுரை வட்டரா போக்குவரத்து தெற்கு அலுவலகத்தில் சொந்த கார்களை ஒட்டுவதற்கான இலகுரக வாகன உரிமத்தை பெற்றுள்ளார்.

    இந்ந வாகன ஒட்டுநர் உரிமத்தை 2006 மற்றும் 2016 ஆண்டுகளில் புதிப்பித்தும் உள்ளார். இந்நிலையில் இவரது வாகன ஒட்டுநர் உரிமம் பற்றி சில தகவல்கள், ஆர்.டி.ஐ மூலமாக தகவல் பெறப்பட்டுள்ளது. 1999 ஆம் ஆண்டு இலகுரக வாகன ஒட்டுநர் உரிமத்தை மதுரையில் பெற்ற ராஜேந்திரன் சென்னையில் அந்த உரிமத்தை பத்து ஆண்டுகளுக்கு முன்பே பெற்றதாக தகவல் கிடைத்துள்ளது.



    அத்துடன் கனரக வாகனம் உரிமம் பெற விண்ணப்பிக்காத ராஜேந்திரனுக்கு மதுரையிலும் ,மீனம்பாக்கம் போக்குவரத்து அலுவலகத்திலும் கனரக வாகனத்தை ஒட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் ஆர்.டி.ஐ தகவல் மூலமாக தெரியவந்துள்ளது. ஒட்டுநர் உரிமத்திற்காக போக்குவரத்து அலுவலத்தால் ஒருவருக்காக ஒதுக்கப்படும் டி.எல் எண்ணை பலருக்கு கொடுத்து மோசடி நடப்பது இதன் மூலம் தெரியவருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இதுபோன்று தகுதி இல்லாத மற்றும் விண்ணப்பிக்காத நபர்களுக்கு கனரக வாகன ஒட்டுநர் உரிமம் ஆண்லைன் மூலமாக சட்டவிரோதமாக கொடுப்பதன் மூலமாக விபத்துகள் அதிகரித்து அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதாக அச்சம் எழுந்துள்ளது .

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: