நெல் சாகுபடிக்கு சொட்டு நீர் பாசனம்: கலக்கும் கடலூர் விவசாயிகள்

எதிர்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதால், சொட்டு நீர் பாசன முறை, விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று கடலூர் வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நெல் சாகுபடிக்கு சொட்டு நீர் பாசனம்: கலக்கும் கடலூர் விவசாயிகள்
சொட்டு நீர் பாசனமுறை
  • News18
  • Last Updated: October 31, 2018, 3:48 PM IST
  • Share this:
கடலூரில் 100 விழுக்காடு மானியத்துடன் சொட்டு நீர் பாசன முறையில், நெல் சாகுபடி அமோகமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் வழக்கத்தைவிட 25 விழுக்காடு உற்பத்தி அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. 

கடலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், நெல், கரும்பு, வாழை ஆகியவற்றை விளைவித்து வருகின்றனர். நெல் பயிரிட அதிக அளவில் தண்ணீர் தேவைப்படும் நிலையில் பருவ மழை பொய்த்துப்போவது, காவிரி நீர் பிரச்சனை, மின் தட்டுப்பாடு, நிலத்தடி நீர் மட்டம் பாதிப்பு, கடல் நீர் உட்புகுதல் போன்ற பல்வேறு பிரச்னைகளால் ஒரு போகம் பயிர் செய்வதே சவாலாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடலூர் காரைக்காடு கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர், முழு அரசு மானியத்தில், முதல் முறையாக சொட்டு நீர் பாசன முறையில் நெல் பயிர் சாகுடி செய்துள்ளார்.

சொட்டுநீர் பாசனத்தின் மூலம் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் முறைஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு 50 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில், சொட்டு நீர்ப் பாசனம் மூலம், 14 லட்சம் லிட்டர் மட்டுமே போதுமானது என்கிறார் கணேசன். இதனால், முன்பு 6 மணி நேரம் தண்ணீர் பாய்ச்சி வந்த நிலையில், தற்போது ஒரு மணி நேரம் மட்டுமே பாய்ச்சுவதால், தண்ணீர் மற்றும் மின்சாரம் சேமிக்கப்படுவதாகவும் கூறுகிறார்.

நெல்சாகுபடிக்கு சொட்டுநீர் முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.


எதிர்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதால், சொட்டு நீர் பாசன முறை, விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இத்திட்டத்திற்காக கடலூர் மாவட்டத்திற்கு 68 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 விழுக்காடும், இதர விவசாயிகளுக்கு 75 விழுக்காடும் மானியம் வழங்கப்படுவதாக வேளாண் உதவி இயக்குநர் பூவராகவன் தெரிவித்துள்ளார்.
கடலூரில் நட்ட வயல்களுக்கு சொட்டு நீர் பாசனத்தின் மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.


தற்போது விவசாயப் பணிகளுக்கு போதிய அளவில் ஆட்கள் கிடைக்காத சூழல் நிலவுகிறது. இந்நிலையில், சொட்டு நீர் பாசன முறையை பின்பற்றுவதால் உற்பத்தி அதிகரிப்பதுடன் களையெடுக்க, உரம் போட, தண்ணீர் பாய்ச்சுவதற்கு ஆட்கள் தேவை குறைந்திருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Also see...
First published: October 31, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading