சாலையில் வீணாகச் செல்லும் குடிநீரில் துணி துவைத்து, குளித்து விட்டுச் சென்ற நபர் ... அதிகாரிகள் மெத்தனம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு
சாலையில் வீணாகச் செல்லும் குடிநீரில் துணி துவைத்து, குளித்து விட்டுச் சென்ற நபர் ... அதிகாரிகள் மெத்தனம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு
சாலையில் வீணாகச் செல்லும் குடிநீர்
Erode District : ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சி ஆணையாளர் வீடு எதிரே மற்றும் பவானி காவல்நிலையம் எதிரே பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் குடிநீர் குழாய் உடைந்து சில நாட்களாக குடிநீர் வீணாகிக் கொண்டிருந்தது .
ஈரோடு மாவட்டம் பவானியில் முக்கிய சாலையாக விளங்குவது பவானி மேட்டூர் சாலை . இந்த சாலை தான் சேலம், மேட்டூர், கோபி, ஆந்தியூர் என பல்வேறு பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாக விளங்கி வருகிறது. இந்த சாலை பவானி காவல்நிலையம், வருவாய் அலுவலகம் மற்றும் பவானி நகராட்சி ஆணையாளர் வீடு என முக்கிய பிரபலங்களை உள்ளடக்கிய சாலையாக உள்ளது. இந்த நிலையில் பவானி நகராட்சி ஆணையாளர் வீடு எதிரே மற்றும் பவானி காவல்நிலையம் எதிரே பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் குடிநீர் குழாய் உடைந்து சில நாட்களாக குடிநீர் வீணாகிக் கொண்டிருந்தது .
குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வெளியேறுவது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, மேலும் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வெளியேறுவது பவானி முக்கிய சாலை என்பதால் வாகன ஓட்டிகள் குடிநீர் வெளியேறும் பள்ளத்தில் விழாமல் இருக்க தடுப்பு அமைத்துள்ளனர்.
இதனிடையே தற்போது கோடைகாலம் என்பதால் வெயில் காலத்தில் பல்வேறு இடங்களில் தண்ணீர் இல்லாமல் தட்டுப்பாட்டில் உள்ளனர். எனினும் பவானி நகராட்சியில் மட்டும் தண்ணீர் வீணாகி சென்று கொண்டுள்ளது. இதை கண்டுகொள்ளாமல் நகராட்சி ஆணையாளர் தனது மெத்தனப் போக்கில் நடந்து கொண்டுள்ளார்.
குடிநீர் வெளியேறுவதை கண்ட நபர் ஒருவர் அணிந்திருந்த துணிகளை கழட்டி முக்கிய சாலையிலேயே துணி்துவைத்து , குளித்து விட்டு சென்றார். குடிநீர் குழாய் உடைந்து பல நாட்களாக குடிநீர் வெளியேறி வருவதும், அதில் நபர் ஒருவர் பொறுமையாக துணி துவைத்து , குளித்து செல்வது பவானி நகராட்சியின் மொத்தனத்தை காட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
செய்தியாளர் : ஈரோடு : மா.பாபு.
Published by:Sankaravadivoo G
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.