வாரத்திற்கு 1 நாள் மட்டுமே வரும் குடிநீர்... தருமபுரி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
வாரத்திற்கு 1 நாள் மட்டுமே வரும் குடிநீர்... தருமபுரி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
தருமபுரி புதிய செய்திகள்
Dharmapuri District : ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திலிருந்து நெருப்பாண்டகுப்பம் கிராம மக்களுக்கு தேவையான குடிநீரை வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்தநெருப்பாண்டகுப்பம் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் அவதியுறுகின்றனர்.
அரூர் ஊராட்சி ஒன்றியம், எச்.அக்ராஹரம் கிராம ஊராட்சிக்குபட்ட நெருப்பாண்ட குப்பம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்யும் வகையில், அந்த ஊரில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ளது.
இதைத் தவிர 7 இடங்களில் ஆழ்துளைக்கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆழ்துளைக் கிணறுகள் பழுதாகி இருப்பதாக கிராம மக்கள் புகார் கூறுகின்றனர்.
இந்நிலையில், நெருப்பாண்ட குப்பம் கிராமத்துக்கு வாரத்தில் ஒருநாள் மட்டும் குடி நீர் விநியோகம் செய்யப்படுவதாகக் கிராம மக்கள் புகார் கூறுகின்றனர்.
எனவே, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திலிருந்து நெருப்பாண்டகுப்பம் கிராம மக்களுக்கு தேவையான குடிநீரை வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தியாளர் : ஆர்.சுகுமாா், தருமபுரி
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.