சென்னை : குடிநீரை கழிவறைக்கு கூட பயன்படுத்த முடியாத அளவு துர்நாற்றம் - மக்கள் வேதனை

குடிநீர் கருமையான நிறத்தில் அதிக துர்நாற்றத்துடன் இருப்பதால், கழிப்பறைக்கு கூட பயன்படுத்தமுடியாத நிலை உள்ளதாக இப்பகுதி மக்கள் வேதனைபடுகின்றனர்.

  • Share this:
தலைநகர் சென்னையின் மையப்பகுதியில் உள்ள மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர், கருப்பு நிறத்தில் அதிக துர்நாற்றத்துடன் உள்ளது. இதனை பயன்படுத்தவே முடியாது என்பதால் அனைத்து தேவைகளுக்கும் காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் அவல நிலையை இம்மக்கள் சந்தித்து வருகின்றனர்.

அமைந்தகரை, பொன்னுவேல் பிள்ளை தோட்டம் பகுதியில் 1200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குடிநீர் வாரியம் சார்பில் இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு ஒரு நாள் விட்டு ஒருநாள் மாலை 6 மணி முதல் 8 மணி வரை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அப்படி வரும் குடிநீர் கருமையான நிறத்தில் அதிக துர்நாற்றத்துடன் இருப்பதால், கழிப்பறைக்கு கூட பயன்படுத்தமுடியாத நிலை உள்ளதாக இப்பகுதி மக்கள் வேதனைபடுகின்றனர்.பாத்திரம் கழுவ, துணி துவைக்கக்கூட பணம் கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறும் மக்கள், சென்னை குடிநீர் வாரிய 8வது மண்டல அதிகாரிகளிடம் பலமுறை கடிதம் மூலமும் நேரடியாக சென்று புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்கின்றனர்.

குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக குற்றம்சாட்டும் இம்மக்கள், கொரோனா காலத்தில் மேலும் பல்வேறு நோய்த் தொற்றுக்கு ஆளாவதாக தெரிவிக்கின்றனர்.நாடு முழுவதும் பரவும் கொரோனா குறித்த தற்போதைய விரிவான தகவல்கள்
First published: November 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading