சிவகங்கை எல்லையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்: சோழவந்தான் பகுதியில் மதுப்பிரியர்கள் குவிந்ததால் திணறிய காவல்துறை

சிவகங்கை எல்லையில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் ஊரடங்கு அமல்படுத்தப்படாத சோழவந்தான் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மதுரை நகர் மதுப் பிரியர்கள் படையெடுத்து வருகின்றனர்.

சிவகங்கை எல்லையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்: சோழவந்தான் பகுதியில் மதுப்பிரியர்கள் குவிந்ததால் திணறிய காவல்துறை
மதுப்பிரியர்கள்
  • Share this:
மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இங்கு டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் மதுரை நகர் பகுதியை ஒட்டியுள்ள சிவகங்கை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளில் கடந்த 3 நாட்களாக மது பிரியர்கள் போலீசாரின் கண்களில் மண்ணை தூவி படையெடுத்தனர்.

இதுதொடர்பாக தொடர்ந்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி சுட்டிக்காட்டியதன் அடிப்படையில் இன்று சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ள நான்கு டாஸ்மாக் கடைகளை மூட சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் உத்தரவிட்டார். இதனால் ஏமாற்றமடைந்த மதுரை நகர் மது பிரியர்கள், ஊரடங்கு அமல்படுத்தப்படாத புறநகர் பகுதியான சோழவந்தான் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள பகுதியில் காவல் நிலைய சரகத்தைத் தாண்டி வெளியே செல்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்த நிலையிலும், சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ள நிலையிலும் போலீசார் கண்ணில் மண்ணைத் தூவி பொடி நடையாகவும், சைக்கிள் மற்றும் பைக்குகளில் குறுக்கு வழியாக டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.தேனூர் டாஸ்மாக் கடையில் கட்டுக்கடங்காத கூட்டம் அலை மோதியது. ஒருவரை ஒருவர் முண்டியடித்து சமூக இடைவெளியை பின்பற்றாமல் முகக் கவசம் அணியாமல் ஆபத்தான நிலையில் மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.
First published: June 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading