Home /News /tamil-nadu /

18 மாதங்களில் மதுரையின் முகத்தையே மாற்றி காட்டுகிறேன் - நிதியமைச்சர் பி.டி.ஆர் சவால்!

18 மாதங்களில் மதுரையின் முகத்தையே மாற்றி காட்டுகிறேன் - நிதியமைச்சர் பி.டி.ஆர் சவால்!

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

மதுரையில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையிலான முக்கியமான முதலீட்டு திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது எனவும் 18 முதல் 24 மாதங்களில் மதுரையின் முகமே மாறும் எனவும் தெரிவித்தார்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India
    குஜராத் மாடல் ஆட்சியை விட திராவிட மாடல் ஆட்சி தான் இந்தியாவுக்கு முன்மாதிரியாக இருப்பதாகவும், 18 மாதங்களில் மதுரையின் முகமே மாறும் எனவும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளார்.

    மதுரை தமிழ்ச்சங்க அரங்கில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான சங்கம் நிகழ்வில்  நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று விருதாளர்களை கவுரவித்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்களை செயலாக்குவதன் மூலமாக தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சியடைய வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.” என கூறினார்.

    தங்கம், ரியல் எஸ்டேட் போன்றவற்றில் முதலீடு செய்வது மட்டும் நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது எனவும் அரசால் செய்ய முடியாத தொழில் வளர்ச்சியை தொழில் முனைவோர்களால் தான் செய்ய முடியும். நான் முதல்வன் போன்ற திட்டங்கள் மூலம் மாணவர்களுக்கான தனி திறமையை பள்ளிப் பருவத்தில் இருந்தே உருவாக்க முடியும் எனவும்  எஸ்.சி, எஸ்.டி ஆணையத்திற்கு நிதியும், பணியாளர்களும் நியமிக்க முதலமைச்சர் உத்தரவிட்டதன் பின்னர், அதற்கான நிதி ஒதுக்கி, 60 அலுவலர்களுடன் அது இயங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    இதையும் வாசிக்க: 'திராவிடம்' ஒற்றை வார்த்தை ட்வீட் ட்ரெண்டிஙகில் இணைந்த முதல்வர் ஸ்டாலின் - பின்னணி என்ன?

    இதனையடுத்து குஜராத்தையும் தமிழ்நாட்டையும் ஒப்பிட்டு பேசிய அவர், குஜராத் மாடல் ஆட்சியில் அந்த மாநிலத்தின் வருவாய் தமிழ்நாட்டின் வருவாயைவிட சில ஆயிரங்கள் அதிகம் இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் 1000 பேருக்கு 4 மருத்துவர்கள் வீதம் இருக்கிறார்கள், குஜராத்தில் 1000 பேருக்கு 1 மருத்துவர் தான் இருக்கிறார். இங்கு 80% பெண்கள் உயர்கல்வி பயில்கின்றனர் எனவும் குஜராத்தில் வெறும் 60%-க்கும் குறைவாகவே உயர்கல்வி கற்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். எனவே, திராவிட மாடல் ஆட்சியின் மூலம் தமிழநாடு அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக விளங்குகிறது என தெரிவித்தார்.

    8 ஆண்டுகளாக தமிழ்நாடு, பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்தது எனவும் தற்போது இரண்டு ஆண்டுகளாக மிக சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது எனவும் கூறினார்.

    மேலும் மதுரையில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையிலான முக்கியமான முதலீட்டு திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது எனவும் 18 முதல் 24 மாதங்களில் மதுரையின் முகமே மாறும் எனவும் தெரிவித்தார்.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Dravidam, Finance minister, Gujarat, Tamilnadu

    அடுத்த செய்தி